JobsTn Thoothukudi – தூத்துக்குடி மாவட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை வாய்ப்புகளின் பட்டியல்!!

தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிவரும் வேலைவாய்ப்புகளின் சிறந்த பட்டியலை இந்த பகுதியில் உங்களால் காண முடியும். மேலும் இந்த பட்டியலில் இணைக்கப்படும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், அனுபவத்தின் அடிப்படையில் பணியை பெற விரும்புபவர்கள் என்று அனைவருக்கான வேலைவாய்ப்பு பட்டியலிடப்படும்.

மேலும் இதற்கு இந்த பகுதியில் அரசாங்க வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கக்கூடிய வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைகளில் பட்டியல் அடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

கவனிக்க: இந்தப் பகுதியில் வெளியிடப்படும் தகவல் அனைத்துமே அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருக்கப்படும். உதாரணத்திற்கு புதியதாக வந்த வேலை வாய்ப்புகள் இணைக்கப்படும், காலாவதியான, காலம் முடிந்த, விண்ணப்பிக்க தகுதியற்ற வேலைவாய்ப்புகள் நீக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். எனவே அவ்வப்போது புதுப்பிக்கப்படும் இந்த பகுதியை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருங்கள் உங்களுக்கான வேலை கட்டாயம் இதில் இணைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்ட அக்டோபர் மாதத்திற்கான வேலை வாய்ப்புகளின் பட்டியல்!!

அக்டோபர் மாதத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியான சிறந்த வேலை வாய்ப்புகளின் பட்டியலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அவைகளை தெளிவாக பார்த்து உங்களுக்கான வேலையை தேர்வு செய்து விண்ணப்பியுங்கள்:

பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கக்கூடிய அரசு வேலை வெளியீடு!!

ஊதியம்: Rs. 12,000/-
வேலை இடம்: கோவில்பட்டி, விளாத்திகுளம்
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 01
இறுதி தேதி: 12/10/2023, 05:45PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

திருச்செந்தூர் திருக்கோயிலில் அறநிலைத்துறை வேலை!!

ஊதியம்: Rs. 16600/– To Rs. 52400/-
வேலை இடம்: திருச்செந்தூர் முருகன் கோயிலில்
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 06
இறுதி தேதி: 30/10/2023, 05:30PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் வேலைவாய்ப்பு!!

ஊதியம்: Rs. 27,804/-
வேலை இடம்: குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில்
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 01
இறுதி தேதி: 31/10/2023, 05:30PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்புகள் அரசு மூலம் இப்போது வெளியிடப்படும்?

தூத்துக்குடி மாவட்ட அரசு வேலைகள் அனைத்துமே அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (https://thoothukudi.nic.in/) வெளியிடப்படும். ஒவ்வொரு வேலை வாய்ப்புகளும் தனித்தனிக் கல்வித் தகுதி, தனி தனி ஊதியம், வயதுவரம்பு போன்றவை நிர்ணயிக்கப்படும்.

அவைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் நம்மால் பார்க்க முடியும், சில வேலை வாய்ப்புகளில் பட்டியல் ஆங்கிலத்தில் வரலாம், ஆனால் எங்கள் ஜாப்ஸ்டிஎன் (JobsTn) வலைதள குழு அனைத்தையும் தமிழ் மொழியில் தெளிவான விளக்கங்களோடு இந்த பகுதியில் இணைக்கப்படும். ஆகையால் இந்த பகுதியில் தூத்துக்குடி மாவட்ட சிறந்த வேலை வாய்ப்புகளை உங்களால் பார்க்க முடியும், அது தேர்ந்தெடுக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் ஆக இருக்கும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எழுத படிக்கத் தெரிந்தவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கலாமா?

சந்தேகமே வேண்டாம்!! கட்டாயம் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய ஆஃபீஸ் அசிஸ்டன்ட் வேலை, அறநிலைத்துறை வேலை, காவலர் வேலை என்று பல வேலை வாய்ப்புகள் அரசு மூலம் அறிவிக்கப்படும்.

மேலும் அவை அனைத்தும் அறிவிக்கப்பட்ட உடனே எங்கள் வலைதள குழுவால் சிறந்து விளக்கங்களோடு தமிழ் மொழியில் இங்கு இணைக்கப்படும், எனவே இந்த பகுதியை பார்த்துக் கொண்டிருந்தால் அந்த வேலை வரும்போது கட்டாயம் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.


இந்தப் பகுதி பற்றி பேசலாம்:

இந்த தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு பகுதி உருவாக்க முக்கிய காரணமே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான வேலை வாய்ப்புகளை தனியாக ஒரு பகுதியில் அவர்களுக்கு சிரமம் இல்லாமல் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது மட்டுமே.

எனவே நீங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் (வசிப்பவராக) சேர்ந்தவராக இருந்தால் கட்டாயம் வெளியிடப்படும் அனைத்து வேலை வாய்ப்புகளும் இந்த ஒரே பகுதியில் இணைக்கப்படும். எனவே இதை பார்த்து பயன்பெறுங்கள்.

மேலும் உங்கள் சுற்றத்தார்களுக்கும், நண்பர்கள் என்று அனைவருக்கும் பகிருங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறோம். இருப்பினும் தற்போது உங்கள் பொறுமையான வருகைக்கும், இந்த வாசிப்பிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அடுத்த சிறந்த தூத்துக்குடி வேலையை தேடி பயணிக்க போகிறோம் என்பதையும் கூறுகிறோம்.