தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது, இந்த அறிவிப்பின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க கூடிய வேலை என்பதை நினைவில் கொண்டு பயணிக்கலாம்.
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான அறிவிப்பு:
தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட உட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை, அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யவும்/நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து 25/10/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உண்மைதான்!! தூத்துக்குடி மாவட்டத்தில் ஒப்பந்த முறையில் வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது, இது சம்பந்தமான தெளிவான விளக்கங்கள், விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வயது வரம்பு, காலி பணியிடங்கள், கல்வி தகுதி, முன் அனுபவம் போன்ற அனைத்தையும் இந்த JobsTn வலைதள கட்டுரை தெளிவாக பார்க்க உள்ளோம் வாருங்கள்.
Tuticorin District, Regional Coordinator Job Details!
அறிவிப்பு | thoothukudi.nic.in |
பதவி | வட்டார ஒருங்கிணைப்பாளர் |
சம்பளம் | 12,000/- |
காலியிடம் | 2 |
பணியிடம் | தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை, கோவில்பட்டி, விளாத்திகுளம் |
தகுதிகள் | இளங்கலை பட்டம் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25/10/2023 |
தூத்துக்குடி மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான ஊதியம் எவ்வளவு?
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளியான வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்தின் அறிவிப்பின் அடிப்படையில் தொகுப்பூதியமாக மாதம் 12,000 ரூபாய் வழங்கப்படும். அதோடு தொகுப்பூதியம் என்பது குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் ஊதியம் ஆகும், அந்த வேலை நாள் முடியும் வரை கிடைக்கும் ஊதியம்.
குறிப்பு: ஒருவேளை உங்கள் வேலையின் திறனை பார்த்து வேலை நீட்டிக்க படலாம் அல்லது தொடர்ந்து வழங்கப்படலாம் அது நிர்வாகத்தின் கையில் உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட வேலைக்கான வயது வரம்பு:
வட்டார ஒருங்கிணைப்பாளர் கானா பாட்டு இனத்திற்கு வயது வரம்பு 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்ச வயது 28 என குறிப்பிடப்பட்டது. வயது தளர்வு இல்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் 28 வயதிற்கு உட்பட்டவர்கள் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.
வேலைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தூத்துக்குடியில் மாவட்டத்தில் வெளியான மாவட்ட இயக்க மேலாண்மை அலகுக்கு உட்பட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் காலி பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், அவர்கள் தவிர மற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காலி பணியிடங்கள் எங்கெங்கு உள்ளது?
தற்போது வெளிவந்த அறிவிப்பின் அடிப்படையில் கோவில்பட்டி வட்டாரத்தில் ஒரு (1) காலி பணியிடமும் விளாத்திகுளம் பகுதியில் ஒரு (1) காலி பணியிடவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கான கல்வி தகுதி என்ன?
- இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை இளங்கலை பட்டம் முடித்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
- கூடுதல் தகுதி என்ன? கூடுதல் தகுதியை படித்தவரை கணினி அறிவு எம்எஸ் ஆபீஸ் குறைந்தபட்ச 6 மாதம் பயின்ற வராக இருக்க வேண்டும்.
- முன் அனுபவம் என்ன? மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்கள் குறைந்த பட்சம் (2) இரண்டு ஆண்டு அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கியமான குறிப்புகள்:
- விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி சான்று, கணினி (பயின்ற) பயிற்சி பெற்ற சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவற்றுக்களுக்கு நகல் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும், முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- தகுதி இல்லாத மற்றும் காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
இயக்குனர் குறிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல் இணைக்கப்பட்டு இணைத்திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 5:45 வரை நேரில் அல்லது இணைய இயக்குனர், திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் – 628101 தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.
முக்கியம்: நீங்கள் அனுப்பக்கூடிய விண்ணப்பம் 25/10/2023 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
கவனிக்க: வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடம் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் இணை இயக்குனர்/திட்ட இயக்குனர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் தூத்துக்குடியில் மாவட்டத்திற்கான அதிகாரப்பூர் (https://thoothukudi.nic.in/) வலைதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முக்கியமாக எங்களுடைய JobsTn தளத்திலும் நீங்கள் பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு பெறலாம் என்பதை நாங்களும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வேலை வாய்ப்பு பற்றி பேசலாம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் வெளிவந்த இந்த வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விவரங்களை தமிழ் மொழியில் வழங்கி இருக்கிறோம், நீங்கள் விருப்பப்பட்டால் இது உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து நாங்கள் சிறந்த வேலைகளை தேர்ந்தெடுத்து பட்டியலிடுவோம் என்று உத்தரவாதம் கொடுத்து விடைபெறுகிறோம் நன்றி வணக்கம்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.