நீங்கள் கரூர் மாவட்டத்தில் இருந்தால் போதும் அரசு வேலை ரெடி! அனுபவம் போதும்!

  • கரூர் மாவட்டம்
  • அரசு வேலை
  • 10ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும்
  • இரவு காவலர் மற்றும் ஓட்டுநர்
  • ஷிப்ட் முறையில் வேலை
  • மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • 11/06/2024 முதல் 28/06/2024

கரூர் மாவட்டம் ஆட்சித் தலைவர் மூலம் வெளியான வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட முழு தகவலையும் இந்த கட்டுரை மூலம் தொகுத்து வழங்க உள்ளோம்.

By JobsTn.In

நீங்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக மட்டும் இருந்தால் போதும் உங்களுக்கான அரசு வேலை தயாராகிவிட்டது. ஆம் காவலர் மற்றும் ஓட்டுநருக்கான பணி நியமனத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்ட சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துவையின் கீழ் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக தொகுப்பூதிய பணி வழங்கப்பட உள்ளது. மிக முக்கியமாக எதிர்பார்க்க வேண்டியது, நீங்கள் பணிக்கு ஷிப்ட் முறையில் வேலை செய்யலாம்.

அதாவது காலை 6:00 மணி முதல் மதியம் 2 மணி வரை, மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை ஆறு மணி வரை என்று நீங்கள் பிரித்து வேலை செய்ய முடியும்.

இந்த பணி தற்காலிகமான தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

எனவே நீங்கள் வரும் 28/06/2024 பிற்பகல் 5:45 மணிக்குள் உங்களுடைய ஆவணங்களை சரியாக பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் வளாகம் கரூர் மாவட்டம் எனும் முகவரிக்கு தெளிவாக அனுப்ப வேண்டும்.

கவலைவேண்டாம், அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் அனுப்ப வேண்டிய விண்ணப்பம், அதிகாரப்பூர் அறிவிப்பு அனைத்தையும் உங்களுக்கு தெளிவாக தமிழ் மொழியில் வழங்கத்தான் இந்த வலைதள கட்டுரை.

இதில் சில குறிப்புகள் உள்ளது அதையும் நாம் பார்க்கலாம்; அதாவது காவலர் மற்றும் ஓட்டுனர் பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்க ஆசைப்பட்டால், முதலில் நீங்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மேலும் ஊதியத்தை பொருத்தவரை மாதம் தொகுப்பூதியமாக 12000 ரூபாய் உங்களுக்கு வழங்கப்படும், பணி முன் அனுபவம் இருத்தல் வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. காலி பணியிடமாக நீங்கள் ஒரு பணியிடத்தை பெற முடியும்.

ஆகையால் இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை கீழே உள்ள அது கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து நீங்கள் முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்க உங்களை பரிந்துரைக்கிறோம்.

District Social Welfare and Women Empowerment Department Jobs Pdf

முக்கியமான சில கேள்விகள் அதற்கான பதில்கள்;

கரூர் மாவட்ட அரசு வேலை பத்திரிக்கை செய்தி வெளியானது எங்கு?

இந்த பத்திரிக்கை செய்தி கரூர் மாவட்ட அதிகாரப்பூர்வ https://karur.nic.in/ வலைத்தளத்தில் வெளியானது.

பத்திரிகை செய்தி எதன் மூலம் பெறப்பட்டது?

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த சேவை மையம் (ஓஎஸ்சி) 181.

கரூர் மாவட்டம் பணியிடத்தை பற்றி விவரங்கள் என்ன?

கரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட பணியிடங்களை பொறுத்தவரை பணி தற்காலிகமானது, தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. காவலர் மற்றும் ஓட்டுநர் பணியிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்ட அரசு வேலை பணியிடத்தை பற்றிய விவரங்களை வெளியிட்டது யார்?

இந்த பணியிடங்களை பற்றிய விவரங்களை கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வீ. தங்கவேல் அவர்கள் வெளியிட்டார்.

அதிகார கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரப்பூர் அறிவிப்பை எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பை பற்றிய முழு விளக்கங்களை அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு (https://karur.nic.in/notice_category/recruitment/) சென்று நீங்கள் பதிவிறக்கம் செய்ய முடியும். கரூர் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட அரசு வேலையை பொறுத்த வரை 11/06/2024 முதல் 28/06/2024 நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

4 thoughts on “நீங்கள் கரூர் மாவட்டத்தில் இருந்தால் போதும் அரசு வேலை ரெடி! அனுபவம் போதும்!”

Leave a Comment