By JobsTn.In
- No: JIPMER/Surgery/ICMRgenetic4
- பதவியின் பெயர் (எண்): திட்ட தொழில்நுட்ப ஆதரவு III – 1, மற்றும் திட்ட தொழில்நுட்ப ஆதரவு II- 1.
- சாத்தியமான காலம்: ஒரு வருடம், மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
- ஒருங்கிணைந்த ஊதியம்: கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
- திட்டத் தலைப்பு: ” மார்பகப் புற்றுநோய் நோயாளிகளில் மல்டிஜீன் பேனல் அடிப்படையிலான உலகளாவிய மரபணு சோதனையின் மருத்துவப் பயன்பாடு மற்றும் அடுக்கை சோதனையில் அதன் தாக்கம்”.
- நிதியளிப்பு நிறுவனம்: ஐசிஎம்ஆர்
- திட்ட ஆய்வாளர் (PI): டாக்டர். கோமதி சங்கர் . வி
திட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பு: |
ஜிப்மர், அறுவை சிகிச்சைத் துறையின் ICMR திட்டத்திற்காக பின்வரும் பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை இரண்டு பக்க CV மற்றும் சமீபத்திய புகைப்படத்துடன் jipmergeneticclinic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசித் தேதி 02.07.24- மாலை 4.30 ஆகும்.
ஜிப்மரில் அவ்வப்போது சிறந்த பணியிடங்கள் வெளியிடும், இந்த பணியிடங்களுக்காக மக்கள் ஆர்வமாக காத்திருப்பது உண்மைதான். அந்த வகையில் தற்போது சிறப்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பின் அறிவிப்பின்படி ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் III – 1, மற்றும் II – 1 என்ற பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களை பொறுத்தவரை ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு காலி பணியிடம், அதாவது மொத்தம் இரண்டு பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் நீங்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் நீங்கள் அனுப்ப வேண்டும். நீங்கள் அனுப்பக்கூடிய மின்னஞ்சல் ஆனது 2/7/2024 மாலை 4:30 மணிக்குள் நிர்வாகத்தை சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் இதுதான் jipmergeneticclinic@gmail.com.
மேலும் விவரங்களை பொறுத்தவரை இந்த ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் III – 1 வேலைவாய்ப்புக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதியத்தை பொருத்தவரை 28 ஆயிரம் முதல் 33,040 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
மேலும் ப்ராஜெக்ட் டெக்னிக்கல் சப்போர்ட் II – 1 என்ற வேலைக்கு 20000 முதல் . 23,600 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. கூடுதல் தகுதியாக எம்எஸ் ஆபீஸ், எக்ஸெல், எம்எஸ் வேர்டு போன்ற தொழில்நுட்ப தகுதி இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆகவே, அனைத்து தகுதிகளையும் தெளிவாக பார்த்து, ஆர்வமாக உள்ளவர்கள் தங்கள் தகுதியை சரிபார்த்துக் கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம், அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.