தமிழ்நாடு மாநில சமூக நலத்துறையின் (TN SWD) கீழ் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள மிசான் வட்சாலயா திட்டத்தின் கீழ் பணியிடங்களை (Mission Vatsalya) வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடம் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 14.12.2023 வரை பெறப்படும்.
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே மற்றும் நேரில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு அரசு காலியிடங்கள்: அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 01 பணியிடங்கள் காலியாக உள்ளன.

அசிஸ்டெண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு, கணினி பயிற்சி சான்றிதழ் அல்லது 12ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோவை அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வயது வரம்பு: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 42 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
அரியலூர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் சம்பளம்: இந்த தமிழ்நாடு அரசுப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.13,240/-.
தேர்வு செயல்முறை: அசிஸ்டண்ட் கம் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களின் நகல்களுடன் பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 14.12.2023க்கு முன் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை அரியலூர் – 621704.
அரியலூர் Assistant cum Data Entry Operator அறிவிப்பு & விண்ணப்பம் | APPLICATION PDF |

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.