மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் வரும் டிஆர்டிஓ, பணியாளர் திறன் மேலாண்மை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.35,220 முதல் ரூ.59,276 வரை உள்ள பணிக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) என்பது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பாகும்.
DRDO Requirement 2023 காலியிடங்கள்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள DRTO பணியாளர் திறமை மேலாண்மை மையத்தின் படி காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது:
- ப்ராஜெக்ட் ஸ்டோர் ஆபீசர் பதவிக்கு – 1
- ப்ராஜெக்ட் சீனியர் அட்மின் அசிஸ்டென்ட் பதவிக்கு – 5
- ப்ராஜெக்ட் அட்மின் அசிஸ்டென்ட் பதவிக்கு – 5
DRDO ADVERTISEMENT No.: CEPTAM/PBM/2023/01 கல்வித் தகுதி:
பிஏ, பிகாம், பிஎஸ்சி, பிசிஏ அல்லது அதற்கு இணையான படிப்பு மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் இந்த 3 பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்: ப்ராஜெக்ட் ஸ்டோர் ஆபீசர் பதவிக்கு செயல்பாடுகள், சரக்கு மேலாண்மை, நிதித் துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்களும். ப்ராஜெக்ட் சீனியர் அட்மின் அசிஸ்டென்ட் பதவிக்கு இந்தத் துறைகளில் 6 வருட அனுபவம் உள்ளவர்களும். மற்றும் ப்ராஜெக்ட் அட்மின் அசிஸ்டெண்ட் பதவிக்கு 3 வருட அனுபவம் உள்ளவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
DRDO Requirement 2023 வயது வரம்பு:
ப்ராஜெக்ட் ஸ்டோர் அதிகாரி 50 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். நிர்வாக உதவியாளர் 45 வயது மற்றும் திட்ட நிர்வாக உதவியாளர் 35 வயது இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிக்கைகளின்படி (அதிகாரப்பூர்வ விதிகளின்படி) வயது வரம்பு உள்ளது.
DRDO Vacancies 2023 மாத சம்பளம்:
திட்ட அங்காடி அதிகாரியாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.59,276 சம்பளம் வழங்கப்படும். திட்ட முதுநிலை நிர்வாக உதவியாளருக்கு மாதம் ரூ.47,496 ஊதியம் வழங்கப்படும். திட்ட நிர்வாக உதவியாளர் பதவிக்கு மாத ஊதியமாக ரூ.35,220 வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC, ST, PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
எப்படி விண்ணப்பிப்பது:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://drdo.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கவனிக்க: இது ஒரு தற்காலிக பதவி. வேட்பாளர்கள் ஒரு வருட காலத்திற்கு நியமிக்கப்படுவார்கள். மேலும் DRDO Requirement 2023க்கு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
DRDO Requirement 2023 அறிவிப்பு | DRDO Jobs 2023 Pdf |
DRDO வேலைக்கான அப்ளை லிங்க் | Apply Online |
DRDO வலைத்தளம் | drdo.gov.in |
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.