ரயில்வே துறையின் RailTel நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த RailTel வேலைவாய்ப்பு நேர்காணல் மூலம் ஆட்களை தேர்ந்தெடுத்து வேலையை வழங்குவதற்கான ஒரு பணி நியமன அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகையால் இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையில் காண உங்களை பரிந்துரைக்கிறோம். அதாவது ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனமான RailTel என்பது சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் பார்க்கக்கூடிய தகவல் இது.
இந்த அறிவிப்பானது 5/3/ 2024 அன்று வெளியிடப்பட்டது, இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்காணலில் கலந்து கொள்ளக்கூடிய தகவல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது, அந்த அறிவிப்பினை பார்க்கும் வாய்ப்பு இந்த கட்டுரையில் உங்களுக்காக கீழே காத்திருக்கிறது.
வேலைக்கான காலியிடத்தை பொருத்தவரை ஐந்து காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது, இவைக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்பதை கட்டுரை ஆரம்பத்தில் நாம் பேசிவிட்டோம்.
இந்த பணியிடத்திற்கான அறிவிப்பின்படி டிஸ்ட்ரிக்ட் மேனேஜர் எனும் பணிக்கு தான் ஐந்து காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.
இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரியில் B.Tech, Diploma, BCA, MCA, மற்றும் M.Sc போன்ற படிப்பினை முடித்தவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.
மேலும் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 21 வயதை கடந்தும், 50 வயதை கடக்காமலும் இருக்க வேண்டும் என்பதை நிபந்தனை ஆகும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமை அடிப்படையில் சம்பளம் பெறுவார்கள், அதே சமயம் வரும் 27/3/2024 அன்று சரியாக காலை 10 மணிக்கு நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இந்த பதிவுக்கு ஆர்வமும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் கீழே pdf ஆக கொடுத்துள்ளோம், அதை பயன்படுத்துங்கள்.
கவனிக்க: அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ RailTel மூலம் வெளியிடப்பட்டது என்பதை குறிப்பிடத்தக்கது.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.