வடகிழக்கு இரயில்வேயில் ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு இல்லாமல் 1104 அப்ரண்டிஸ் காலியிடங்களை வழங்குகிறது. 10th/12th மற்றும் ITI தகுதிகளுடன் ரயில்வே துறையில் சேரவும். வயது தளர்வு உண்டு. 24.12.2023க்குள் விண்ணப்பிக்கவும், மாதாந்திர உதவித்தொகையைப் பெறவும். குறிப்பிட்ட பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. தகுதியை சரிபார்த்து இப்போதே விண்ணப்பிக்கவும்! விவரங்கள் கீழே:
RRC ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 25.10.2023 அன்று ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வடகிழக்கு ரயில்வேயில் (என்இஆர்) அப்ரண்டிஸ் பணிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக 1104 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரயில்வே துறை காலியிடங்கள்: சமீபத்திய அறிவிப்பின்படி, வடகிழக்கு ரயில்வேயில் 1104 அப்ரண்டிஸ் பணியிடங்கள் உள்ளன.
அப்ரண்டிஸ் கல்வி விவரம்: அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் 10வது / 12ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் மட்டுமே சம்பந்தப்பட்ட ரயில்வே வேலை துறையில் அப்ரண்டிஸ் பணிக்கு விண்ணப்பிக்க முடியும்.
மாணவர்களின் வயது விவரங்கள்: இந்த வடகிழக்கு ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 25.11.2023 தேதியின்படி 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், உடல் ஊனமுற்றோர் – 10 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்படுகிறது.
பயிற்சி ஊக்கத்தொகை: இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆட்சேர்ப்பு செய்பவர்கள் தொழிற்பயிற்சி தரத்தின்படி மாத வருமானம் பெறுவார்கள்.
வடகிழக்கு ரயில்வே தேர்வு செயல்முறை: தகுதிப் பட்டியல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் பயிற்சியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வடகிழக்கு ரயில்வே விண்ணப்பக் கட்டணம்: SC / ST / EWS / PWBD / பெண்கள் – விண்ணப்பக் கட்டணம் இல்லை மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- செலுத்தவேண்டும்.
வடகிழக்கு இரயில்வேயில் விண்ணப்பிக்கும் முறை: இந்த வடகிழக்கு இரயில்வே இலாகாப் பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஆன்லைனில் 24.12.2023க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இரயில்வே விளம்பரம் | NOTIFICATION 2023-24 |
விண்ணப்பம் | apprentice.rrcner.net |
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.