தர்மபுரி மாவட்ட கிராம உதவியாளர் வேலை 2025 – 10ம் வகுப்பு போதும் | 39 காலியிடங்கள் | விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.08.2025

தர்மபுரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 39 காலியிடங்கள் உள்ளன. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பதவி, தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு விளக்கம் உள்ளிட்ட முழு விபரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

🏢 வேலைவாய்ப்பு முழு விவரம்:

விவரம்தகவல்
நிறுவனம்வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை
பணியின் பெயர்கிராம உதவியாளர் (Village Assistant)
பணியிடம்தர்மபுரி மாவட்டம்
பணியின் வகைதமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள்39
தகுதி10ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை
விண்ணப்பத்தின் தொடக்க தேதி21.07.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி20.08.2025
விண்ணப்பிக்கும் முறைநேரில் / அஞ்சல் மூலம்

🗂️ தாலுகா வாரியாக காலியிடங்கள்:

தாலுகா பெயர்காலியிடங்கள்
தர்மபுரி12
காரிமங்கலம்02
நல்லம்பள்ளி07
பாலக்கோடு08
பென்னாகரம்10

🎓 கல்வித் தகுதி:

  • குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழில் பிழையின்றி படித்து எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் அந்த வட்டத்தை சேர்ந்தவராகவும், அங்கு நிரந்தரமாக வசித்து வருபவராகவும் இருக்க வேண்டும்.
  • காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்திலுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

🎯 வயது வரம்பு:

வகைகுறைந்தபட்சம்அதிகபட்சம்
SC/ST/BC/MBC2137
மாற்றுத்திறனாளிகள்2142
பொதுப்போக்கு (OC)2132

📝 தேர்வு முறை:

  1. வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன்
  2. மிதிவண்டி அல்லது இருசக்கர வாகனம் ஓட்டும் திறன்
  3. நேர்முகத் தேர்வு (Interview)
  4. சான்றிதழ் சரிபார்ப்பு

📎 விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பப்படிவத்தை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
  • முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வழங்க வேண்டும்.
  • நேரில் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை.

📄 அதிகாரப்பூர்வ அறிவிப்பு Links:


❗ முக்கிய குறிப்புகள்:

  • விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகுதி மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் தங்களிடம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • விண்ணப்பம் தவறான தகவல்களுடன் இருந்தால் நிராகரிக்கப்படும்.

Leave a Comment

🔄