(CISF) வேலைவாய்ப்பு Pay Level-5: Rs. 29,200-Rs. 92,300/-

இந்தியாவின் தொழில் நிலையங்களை பாதுகாக்கக்கூடிய துணை ராணுவ படையான மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் Central Industrial Security Force (CISF) தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு செய்தி வெளியாகி உள்ளது.

இதில் ஆயுதம் ஏந்திய மத்திய காவல் படைகள் துணை ராணுவப்படையான தொழில்துறை (CISF) பாதுகாப்புப் படையில் 540 உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஹெட் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த (CISF) வேலைவாய்ப்பு தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறிய முயற்சியில், தமிழ் மொழியில் இந்த வேலையை பற்றி தொகுத்து வழங்குவதற்காக முயற்சித்தோம், இதற்கு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தொழில் பாதுகாப்பு படையில் சேருவதற்கான கல்வி தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் விதம், ஊதியம் போன்ற பல விளக்கங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் சேகரித்து உங்களுக்கு தொகுத்து வழங்கியுள்ளோம், எனவே கட்டுரையை கவனமாக பின்பற்றுங்கள்.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ வலை தளத்தின் அறிவிப்பை பார்வையிடுங்கள், அந்த அறிவிப்பை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு எங்கள் வலைதள கட்டுரையின் மூலம் கிடைக்கும், தொடர்ந்து இந்த கட்டுரையை பயணிக்கும் போது உங்களிடம் வந்து சேரும்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

அறிவிப்பு தேதி என்ன?

இந்த வேலைக்கான அறிவிப்பு தேதி ஆனது 08/09/2022 அன்று வெளியிடப்பட்டது, மேலும் இதற்கு இறுதியாக குறிப்பிடப்பட்டது 25/09/2022 ஆகும்.

அதற்குள் உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும், அதைப் பற்றிய விபரங்கள் உங்களுக்கு இந்த வலைதள கட்டுரையில் கிடைக்கும்.

வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை 4 கட்டமாக மற்றும் 5 கட்டம் என்று பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐந்தாவது கட்டத்தில் இருபத்தி (Pay Level-5: (Rs.29,200-92,300/- in pay matrix) கொடுக்கப்பட்டுள்ளது.

நான்காவது கட்டத்தில் (Pay Level-4: (Rs.25,500-81,100/- in pay matrix) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் நீங்கள் வேலையில் சேரும்போதே எந்த லெவலில் இருக்கிறீர்களோ அதற்கேற்றவாறு உங்களுக்கு ஊதியமும் மற்றும் கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.

கல்வி தகுதி என்ன?

வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை நீங்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் நிச்சயம் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு 540 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அதை பொருத்து நீங்கள் விண்ணப்பிக்கும் போது உங்களின் ஆவண சரிபார்ப்பு மற்றும் தேர்வு முறையை பின்பற்றி வேலை வழங்கப்படும்.

வேலைக்கான வயது வரம்பு?

வயதை பொருத்தவரை 18 வயது முதல் 23 வயது வரை இருக்க வேண்டும், வருஷத்தின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது, அதை பற்றிய தெளிவான விளக்கங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த தேர்வு முறையானது பலவகையான வழிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

(Physical Standard Test (PST), Documentation, Written Examination under OMR Based/Computer Based Test (CBT Mode), Skill Test (Dictation & Transcription for Assistant sub Inspector (Stenographer) & Typing Test for Head Constable (Ministerial) and Medical Examination.)

குறிப்பிடப்பட்ட இவைகள் அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் இதற்கு நீங்கள் தேர்ச்சி பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

jobstn Gif Tele Jobs Tn

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

Central Industrial Security Force (CISF) வேலைக்கான விண்ணப்பப் படிவத்தை நீங்கள் முதலில் பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதில் இது சம்பந்தமான அனைத்து தகவல்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, அதை முதலில் படித்து பாருங்கள்.

படித்து பார்த்த பின்பு அதில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள், அதில் உங்களுடைய புகைப்படம், மொபைல் நம்பர், மின்னஞ்சல் போன்றவற்றை தெளிவாக கொடுங்கள்.

அவ்வாறு உள்ளிட்ட ஆவணங்களை சரியாக பூர்த்தி செய்த பின்னர் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யுங்கள்.

பதிவேற்றம் செய்த உங்களுடைய ஆவணம் சரிபார்க்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டால் உங்களை தொடர்பு கொள்வார்கள், அப்போது நீங்கள் இந்த பணிக்கு உங்களை தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள், பின்பு தேர்வு முறையின் அடிப்படையில் இந்த பணி உங்களுக்கு வழங்கப்படும்.

அறிவிப்புCentral Industrial Security Force
துறைCISF (மத்திய தொழில் பாதுகாப்பு படை)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கcisf.gov.in
சம்பளம்Rs. 25,000/- to Rs. 92,300/-
தொடக்க தேதி26/09/2022
கடைசி தேதி25/10/2022 @ 05.45 PM
வேலை இடம்இந்தியா முழுக்க
பதிவுமுறையை(Online) மூலமாக

கவனியுங்கள்:

இந்தியாவின் தொழில் நிலையங்களை பாதுகாக்கக்கூடிய துணை ராணுவத்துக்கான இந்த பணியானது மிகவும் மரியாதை மிக்க வெளியாகும்.

இந்திய தொழில் துறைகளை பாதுகாக்கக்கூடிய ஆயுதமேந்திய காவல் படையில் பணிபுரிய நீங்கள் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் நீங்கள் விண்ணப்பிக்கலாம், இந்த பணிக்கான தகுதி மட்டும் இருந்தால் போதுமானது.

வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சேகரித்து அதிகாரபூர்வ வலை தளத்தை தொடர்புகொண்டு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உடனே விண்ணப்பியுங்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment