Krishnagiri DHS Recruitment 2023: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்து உள்ள அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய கிருஷ்ணகிரி மாவட்ட டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதாக வாய்ப்பை தற்போது கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் இன சுழற்சி பிரிவில் தகுதி உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது தெளிவாக பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
DHS Recruitment 2023 பதவியின் பெயர்:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த பதிவின் பெயரானது பல் மருத்துவராகும். தொகுப்பூதிய அடிப்படையில் இந்த வேலை வழங்கப்பட உள்ளது, இதற்கு நீங்கள் கீழே உள்ள தகுதிகளில் இணங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி மாவட்ட DHS காலிப்பணியிடங்களில் எண்ணிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி மூலம் வெளியிடப்பட்ட பல் மருத்துவர் பணியிடங்களுக்கு இரண்டு காலி பணியிடங்கள் காலியாக உள்ளது.
DHS Recruitment 2023 வேலைக்கான கல்வி தகுதி:
இந்த வேலையை பொருத்தவரை ஒரு மருத்துவர் வேலை. ஆகையால் பல் மருத்துவர் வேலைக்காக நீங்கள் பிடிஎஸ் (B.D.S) படிப்பையும் முடித்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்ட டி எச் எஸ் வேலை காண வயது வரம்புகள்:
- OC – 18 வயது முதல் 30 வயது.
- BC – 18 வயது முதல் 32 வயது.
- MBC – 18 வயது முதல் 32 வயது.
- SC – 18 வயது முதல் 35 வயது.
- ST – 18 வயது முதல் 35 வயது.
பல் மருத்துவதற்கான ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் பல் மருத்துவர் வேலை இடத்திற்கு 34,000 ஊதியம் தொகுப்பு புதிய அடிப்படையில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: இன சுழற்சி விவரத்தை பற்றிய விவரங்களுக்கு அதிகரிப்பு அறிவிப்பை பாருங்கள்.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது:
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அறிவிப்போடு இணைந்திருக்கும் அந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குனர், சுகாதார பணிகள், மாவட்ட ஆட்சியர் பின்புறம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில், கிருஷ்ணகிரி – 635 115 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
கவனிக்க: பதிவஞ்சல் விண்ணப்பமானது வந்து சேர வேண்டிய கடைசி நாள் 22/12/2023 அன்று மாலை 5 மணி ஆகும்.
விண்ணப்பதாரர்கள் இணைக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் முக்கியமான கடமைகள்:
- விண்ணப்ப படிவத்தை இணைக்க வேண்டும்.
- விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி இருக்க வேண்டும்.
- முழுமையான முகவரி மற்றும் உங்களுடைய தொலைபேசி எண்ணை குறிப்பிட வேண்டும்.
- முன்னுரிமைக்கான சான்றிதழ்க்கான நகலை சுய சான்றோப்புமிட்டு அனுப்ப வேண்டும்.
- கல்வி தகுதியை சான்றிதழ் நகல் இணைத்து சான்றோப்புமிட வேண்டும்.
- பிறந்த தேதிக்கான சான்றிதழ்களையும் இணைத்து, அதற்கும் சுய சான்றோப்புமிட வேண்டும்.
- சாதி சான்றிதழ் நகல் சான்றோப்பைமிட்டு இணைக்க வேண்டும்.
- இருப்பிட சான்றிதழின் நகல், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை சுய சான்றோப்புமிட்டு அனுப்புங்கள்.
கவனிக்க: 30 ரூபாய்க்கான அஞ்சல் வில்லை ஒட்டி, சுய விலாசம் இட்ட கவர் இணைத்து மேற்குறிப்பிட்டுள்ள தேதிக்குள் நீங்கள் விண்ணப்பித்தினை அனுப்ப வேண்டும். முக்கியமான விஷயம் என்னவென்றால் (காலதாமதம்) காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
நீலகிரி மாவட்ட DHS அறிவிப்பு | Notice to Dentistry |
நீலகிரி வலைதளம் | Website |
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.