TN Recruitment 2024: எழுத படிக்க தெரிந்திருந்தாலும், 8ம் வகுப்பு படித்திருந்தாலும் அரசு வேலை நிச்சயம்! தற்போது வந்த புதிய அறிவிப்பு! சம்பளம் 15,700/- முதல்!

TN Recruitment 2024: தற்போது வந்த புதிய அறிவிப்பின் படி ராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஒன்றியம் மற்றும் பொது நிதியத்தின் கீழ் ஊதியம் பெரும் தலைப்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் எனும் பணியிடத்திற்கான நேரடி நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த விண்ணப்பங்களை சரிபார்த்து விண்ணப்பிக்கும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அலுவலக உதவியாளருக்கு மூன்று காலி பணியிடங்களும், இரவு நேர காவலருக்கு ஒரு காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பற்றிய தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

TN Recruitment 2024 பணியிடம்:

வேலைக்கான காலியிடத்தை பொருத்தவரை ஆரம்பத்தில் கூறியது போல் அலுவலக உதவியாளர் வேலைக்கு மூன்று காலி பணியிடங்களும், இரவு காவலர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை கட்டுரையின் தலைப்பில் கூறியது போல் எழுத படிக்கத் தெரிந்த நபர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

  • எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • எழுத படிக்க தெரிந்தவர்கள் விருப்பப்பட்டால் அரசு இரவு காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

TN Recruitment 2024 வேலைக்கான ஊதியம்:

இந்த ராமநாதபுரம் மாவட்ட அரசு வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை இரண்டு வேலைகளுக்கும் ஒரே ஊதியம் தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதாவது அலுவலக உதவியாளர் மற்றும் இரவு நேர காவலர் பணியிடத்திற்கான ஊதியம் 15,700 முதல் அதிகபட்சமாக 50,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Office Assistant Night Watchman வயதுவரம்பு:

வயது வரம்பை பொருத்தவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியான வயதுவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள் கீழே உள்ள தகவலை பாருங்கள்:

அலுவலக உதவியாளருக்கான வயது வரம்பு:

  • SC/CS(A)/ST ஆகியவர்களுக்கு 18 முதல் 37 வயது.
  • BC/MBC/BC(M)க்கு 18 முதல் 34 வயது.
  • OC பிரிவினருக்கு 18 முதல் 32 வயது.

இரவு காவலர் பணியிடத்திற்கான வயது வரம்பு:

  • OC பொறுத்தவரை 18 முதல் 32.
  • BC/MBC/BC(M) பிரிவினருக்கு 18 முதல் 34.
  • SC/CS(A)/ST பிரிவினருக்கு 18 முதல் 37.
கூடுதல் தமிழக அரசு வேலைகள்!

TN Recruitment 2024 எவ்வாறு விண்ணப்பிப்பது:

உங்களுடைய விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கவும், அந்த வாய்ப்பை கீழே உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, ஆவணங்கள் இணைத்து அலுவலக வேலை நாட்களில் 8/12/2023 முதல் 9/1/2024 பிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பங்களை அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் நேரில் கொடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையாளர்/வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய மண்டபம் உச்சிப்புள்ளி 623534 ராமநாதபுரம் மாவட்டம் என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

TN Recruitment 2024
TN jobs 2024
அதிகாரப்பூர் அறிவிப்பு
அலுவலக உதவியாளர் விண்ணப்பம்
இரவு காவலர் விண்ணப்பம்

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment