மாவட்ட நலவாழ்வு சங்கம் தூத்துக்குடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக உள்ள, மாவட்ட திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளருக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆம், இந்த அறிவிப்பு அடிப்படையில் 19/03/2024 மாலை 5 மணிக்குள் உங்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிய வருகிறது. ஆகையால் அறிவிப்பு சம்பந்தமான முழு விவரங்களும் இந்த வலைதள பகுதியில் இருப்பதால், தகவலை தெளிவாக மற்றும் பொறுமையாக படித்து பாருங்கள்.
பின்னர் தூத்துக்குடி மாவட்ட அரசாங்க வலைதளம், மற்றும் அரசாங்க அறிவிப்பையும் பார்க்கும் வாய்ப்பு கட்டுரையில் இறுதியில் உங்களுக்கு கிடைக்கும். சரி, தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள திட்ட மேலாளர் மற்றும் தரவு உதவியாளர் பணி என்பது ஒப்பந்த அடிப்படையில், மாத தொகுப்பு ஊதிய நிலையில் நிரப்பப்பட உள்ளது.
எனவே, இதற்கான விண்ணப்பங்கள் தான் தற்போது வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஆகயால் உங்கள் விண்ணப்பத்தை தெளிவாக பூர்த்தி செய்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அனுப்ப வேண்டும்.
தற்போது, இதற்கு இரண்டு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சித்த மருத்துவ அலுவலகம் தூத்துக்குடியில் பணிபுரிவதற்காக மாவட்ட திட்ட மேலாளர் பதவிக்காக ஒரு காலி பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சித்த மருத்துவ அலுவலகம் தூத்துக்குடியில் பணிபுரியக்கூடிய வேலையாகும், இதற்கு வயது வரம்பு 35 வயது கடக்காமல், அதாவது தாண்டாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்த மாத ஊதியமாக மாதம் 40 ஆயிரம் ரூபாய் இதற்கு நிர்ணிக்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக தரவு உதவியாளர் எனும் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இரு வேலைகளுக்கும் இரு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு தெரிய வருகிறது. இந்த தரவு உதவியாளர் வேலைக்கும் 35 வயதை கடக்காதவர்கள் விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைக்கு மாத ஊதியமாக 15 ஆயிரம் பெறுவார்கள். அதேசமயம் இந்த பணி முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது என்பது தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யப்படும் நிலையில் மாத பணி நியமத்திற்கான ஒப்பந்த பத்திரம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எப்போது வேணாலும் மாறுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நியமனம் சுகாதாரம் மற்றும் குடும்பத்துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் கல்வித்தகுதி போன்ற கூடுதல் தகவல்களை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெளிவாக புரிந்து கொள்வதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.
இருந்தபோதும், விண்ணப்ப படிவத்தினை எங்களுடைய வலைதளத்திலும் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், தூத்துக்குடி அதிகாரப்பூர்வ அரசு வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்தை நீங்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விண்ணப்ப படிவத்தை இணைக்க வேண்டிய ஆவணங்களை சரியாக இணைக்க வேண்டும். அதாவது கல்வி தகுதி மற்றும் இதர சான்றுகள் அனைத்தையும் நகலெடுத்து சுய சான்றோப்பமிட்டு இணைக்க வேண்டும். அப்படி இணைத்த விண்ணப்ப படிவத்தை 19/03/2024 மாலை 5 மணிக்குள் மாவட்ட நலவாழ்வு சங்கம் தூத்துக்குடி அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ கொடுக்க வேண்டும். கவனிக்க: காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி; மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலகம் தூத்துக்குடி. 628003 ஆகும். எனவே அனைத்து தகவலையும் தெளிவாக பூர்த்தி செய்யுங்கள், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியான நேரத்தில் காலதாமதம் இல்லாமல் உங்கள் விண்ணப்ப படிவத்தை அனுப்பி வையுங்கள். உங்களுக்கு வேலை கிடைக்க எங்கள் வலைதள குழுவின் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.