Thoothukudi Panchayat Union Direct Recruitment 2023: தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான கல்வி தகுதி, வயதுவரம்பு இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் போன்ற விஷயங்களை தெளிவாக இந்த பகுதியில் உங்களால் காண முடியும், கூடுதல் விளக்கங்களுக்கு இந்த (https://thoothukudi.nic.in/) தூத்துக்குடி ஊராட்சி அதிகாரபூர்வ வலைத்தளத்தை பாருங்கள்.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் 07/03/2023 தேதி முதல் 07/04/2023 தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் காலை 10 மணி முதல் மாலை 5:45 மணி வரை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உங்களுக்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும்.
இந்த விண்ணப்பத்தை நீங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும், விண்ணப்ப படிவத்தை கீழே நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைப்பு அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேரடி நியமனம்.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர், 1 இரவு காவலர் நேரடி நியமனம் நடத்தப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம், அதற்கான முழு உதவியும் இங்கு உங்களுக்கு கிடைக்க உள்ளது.
Thoothukudi Panchayat Union Recruitment 2023 Details
Thoothukudi Panchayat Union Direct Recruitment | Notification for the post of Office Assistant and Night Watchman in Thoothukudi Panchayat Union (Direct Recruitment) |
Open Date | 07/03/2023 |
Close Date | 07/04/2023 |
Posted By | Thoothukudi Panchayat Union |
காலி பணியிடம் எத்தனை: தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் மற்றும் 1 இரவு காவலர் பணி.
கல்வி தகுதி என்ன: இந்த Thoothukudi Panchayat Union Direct வேலைக்கான கல்வித் தகுதியை பொறுத்தவரை 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: இந்த Thoothukudi Panchayat office அசிஸ்டன்ட் வேலைக்கான வயது வரம்பு பிரிக்கப்பட்டுள்ளது. 01/07/2022 அடிப்படையில் வயது கணக்கிடப்படுகிறது. பொது பிரிவுக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் 32, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 34, ஆதரவற்ற விதவைகளுக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 37, ஆதிதிராவிடர் அருந்ததியர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆகியோர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 37 ஆகும். (அரசு விதிமுறைகளின் படி உச்ச வயது தளர்வு போன்றவை உண்டு)
ஊதியம் எவ்வளவு: இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை அது அலுவலக உதவியாளர், இரவு காவலர் வேலைக்கு 15,700 முதல் 50,000 வரை அதிக ஊதியமாக வழங்கப்படுகிறது.
- அலுவலக உதவியாளருக்கு 15,700/- முதல் 50,000/- நிர்ணயிக்கப்பட்டது
- இரவு காவலருக்கும் 15,700/- முதல் 50,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேவைப்படும் சான்றிதழ்கள்:
பூர்த்தி செய்யப்பட்ட தகுதியான விண்ணப்பம், கல்வித் தகுதி, இருப்பிட சான்று, முன்னுரிமைச் சான்று மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
இதனை தனபால் மூலாகவோ அல்லது நேரிலோ கொடுக்க வேண்டும், அதோடு சுய முகவரியுடன் கூடிய 25 மதிப்புள்ள தனபால் வில்லை ஓட்டி அனுப்ப வேண்டும் என்பதும் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள்: இந்த வேலையை பொறுத்தவரை நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புமூலம் நடக்கும்.
தபால் அனுப்பவேண்டிய முகவரி: ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை – 628103. தோல்கொபேசி: 0461-2271222.
கவனிக்க: விண்ணப்பங்களை கீழே நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் வாய்ப்பு வழங்கப்படும்.
Thoothukudi Panchayat Union Vacancy 2023?
Direct Recruitment of 2 Office Assistants, 1 Night Watchman Vacancy under Thoothukudi Panchayat Union Title
Qualifications Of Thoothukudi Panchayat Union Vacancy 2023?
The educational qualification for this Thoothukudi Panchayat Union Direct job is an 8th standard pass and able to read and write in Tamil.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.