தேசிய தொழில்நுட்ப NITT நிறுவனமானது புதிய வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஜூனியர் ரிசர்ச் ஃபாலோ, மற்றும் பிராஜெக்ட் அசோசியேட் ஒன்று, இரண்டு என்று பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்க்கு விண்ணப்பத்திற்கு விருப்பமுள்ளவர்கள் சமர்ப்பிக்கலாம். இருந்தபோதும், அதிகாரப்பூர்வ https://www.nitt.edu/ அறிவிப்பின்படி சேகரிக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பை பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு இங்கு கிடைக்கும், அதை பதிவிறக்கம் செய்து நீங்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
NITT அறிவுப்போடு இணைந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த அனுப்புவதற்கு முன்பு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.
அதாவது இந்த NITT பணியிடத்தில் பொருத்தவரை மூன்று பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்றுக்கும் தனித்தனி ஊதியம், தனித்தனி கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது.
- Junior Research Fellow (JRF)
- Project Associate I
- Project Associate II
அதில் ஜூனியர் ரிசர்ச் வேலைக்கு 31,000 ஊதியமும் மற்றும் ப்ராஜெக்ட் அசோசியேட் இரண்டு என்ற பணியிடத்திற்கு 28 ஆயிரம் ரூபாய், ப்ராஜெக்ட் அசோசியேட் ஒன்று என்ற இடத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
கல்வித் தகுதியை பொருத்தவரை B.E/B.Tech or M.E./ M.Tech போன்ற படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும். கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது, பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் உங்கள் விண்ணப்ப படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு முன் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவிக்கு தகுதியானவர்களாக என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு எங்களுடைய வலைதள கட்டுரை படிக்கும் போதும், அதிகாரப்பூர் அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படிக்கும் போது உங்களுக்கு அது சம்பந்தமான விவரங்கள் தெரியவரும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள் விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ள, அதாவது பரிந்துரைக்கப்பட்ட உரிய ஆவணங்களுடன் pdf ஆக, அதாவது ஒரே PDF ஆக அதை மாற்றி மின்னஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முகவரி ஆனது இந்த (jrfsjn.nitt@gmail.com) மின்னஞ்சல் ஆகும். இந்த மின்னஞ்சலுக்கு நீங்கள் உங்கள் ஆவணங்களை சுய சான்றோப்பமிட்டு, சரியாக பூர்த்தி செய்து அனுப்பி வையுங்கள்.
நீங்கள் அனுப்பி வைக்க வேண்டிய கடைசி தேதி ஆனது, 18 மார்ச் 2024 மாலை 5 மணி, அதற்கு முன்பாக நீங்கள் உங்களுடைய மின்னஞ்சலை அனுப்பி வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் அனுப்பும் போது தொடர்புடைய அனைத்து ஆவணங்களின் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
அதோடு SSLC/10th வகுப்பு மதிப்பெண் அல்லது CGPF சதவீத அனுபவச் சான்றிதழ் போன்றவற்றை இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் நேர்காணலில் கலந்து கொள்ளும்போது அசல் சான்றிதழ்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பதாரர்கள் செல்லுபடியாகும் GATE/NET மதிப்பின் அட்டவணைகளை வைத்திருக்க வேண்டும் என்றும் தேர்வுக்குழுவின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நேர்காணல் கலந்து கொள்ளும் நபர்களுக்கு TA/DA அனுமதிக்கப்படாது என்பதை நினைவில் கொள்ளவும். நேர்காணலில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலம் மட்டுமே வேலை சம்பந்தமான விவரங்கள் தெரிவிக்கப்படும்.
ஆகையால் அனைத்து தகவலையும் தெளிவாக பார்த்து விண்ணப்பிக்க உங்களை கேட்டுக்கொள்கிறோம், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள். அதற்கு முன்பு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படித்து பார்க்க பரிந்துரைக்கிறோம்.

கவனிக்க: வேலையின் காலக்கெடு அதிகபட்சம் 36 மாதங்கள், அதாவது தற்காலிக நிலை ஆரம்பத்தில் 12 மாதங்கள் மற்றும் திருப்திகரமான செயல்திறனுக்கு உட்பட்டு திட்டத்தின் காலத்திற்கு மட்டுமே நீட்டிக்கப்படும்.
NITT Application Form Of Junior Research Fellow (JRF) / Project Associate I / Project Associate II

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.