சென்னை தரமணியில் SETS வேலைவாய்ப்பு காத்திருக்கிறது! திட்ட விஞ்ஞானி, வன்பொருள் மற்றும் மென்பொருளில் திட்ட அசோசியேட்ஸ் போன்ற பணிகளுக்கு இந்த வாய்ப்பைப் பெறுங்கள். ரூ.30,000 முதல் ரூ.80,000 வரையிலான சம்பளத்துடன். நீங்கள் MTech/ME அல்லது தொடர்புடைய BTech பட்டம் பெற்றிருந்தால், இந்த விரும்பத்தக்க பதவிகளுக்கு Google படிவத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். முழு விவரங்கள் கீழே.
சென்னை தரமணியில் இயங்கி வரும் மின்னணு பரிவர்த்தனைகள் மற்றும் பாதுகாப்புக்கான சொசைட்டியில் (SOCIETY FOR ELECTRONIC TRANSACTIONS AND SECURITY [SETS]) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: Project Scientist (Consultant Mode) பணியிடத்திற்கு 1 காலியிடமும், Project Associate (Hardware)க்கு 4 காலியிடமும், மற்றும் Project Associate (Software)க்கு 6 பணியிடங்களும் சேர்த்து மொத்தமாக 11 காலியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதிகள்: ப்ராஜெக்ட் சயின்டிஸ்ட் பணிக்கு கணினி அறிவியல், தகவல் பாதுகாப்பு, சைபர் செக்யூரிட்டி, நெட்வொர்க் செக்யூரிட்டி, எம்பெடட் சிஸ்டம்ஸ், கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ், விஎல்எஸ்ஐ டிசைன், எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் ஆகியவற்றில் எம்டெக், எம்இ படித்திருக்க வேண்டும். ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் Hardware மற்றும் Softwareக்கு PE/BTech இல் ECE, EEE, E&I, CSE, IT, ICT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வரையிலும், மாற்று திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரையிலும் தளர்வும் உள்ளது.
சம்பளம்: roject Scientist (Consultant Mode) (Hardware)க்கு மாதம் ரூ.80 ஆயிரம் வழங்கப்படும். Project Associate (Hardware)க்கு மாதம் Rs.30,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும். roject Associate (Software)க்கு மாதம் 30,000 முதல் 40,000 வரை வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது: மூன்று SETS வேலைகளுக்கும் தனித்தனியாக நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அது சம்பந்தமான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி நேரடியாக நீங்கள் Google Form மூலம் ஒவ்வொரு வேலைக்கும் தனியாக விண்ணப்பிக்க முடியும். அது சம்பந்தமான விவரங்களை கீழே காணுங்கள்.
குறிப்பு: இந்த SETS வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சென்னையில் பணியமறுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க: கூகுள் படிவம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க பொருத்தமான பதவியைத் தேர்வு செய்ய வேண்டும். கூகுள் படிவம் மூலம் விண்ணப்பங்களைப் பதிவேற்றுவதற்கான கடைசித் தேதி 31.12.2023. Google படிவத்திற்கான இணைப்பைக் கீழே காணவும்:
Project Scientists (Consultant Mode) (Hardware) | Apply Online |
Project Associate (Hardware) | Apply Online |
Project Associate (Software) | Apply Online |
தனிப்பட்ட விவரங்கள் படிவத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் (pdf வடிவம்). SETS முகப்புப் பக்கத்தில் https://setsindia.in/careers இல் கிடைக்கிறது.
JobsTn Nandha Kumar is very proficient in writing job-related website articles, Many articles written by him have helped people a lot and many have become a great way to get jobs. Whereas, JobsTn Nandha Kumar is an expert in writing very clear job articles. It is worth noting that he is the best writer for article creation/design as recommended by Google.