SBI Clerk Notification 2023: SBI வங்கி மூலம் 8773 கிளெர்க் காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது!

Follow Us
Sharing Is Caring:

SBI Clerk Notification 2023: SBI வங்கி மூலம் 8773 கிளெர்க் காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது, இந்த பணியிடமானது புதிதாக வந்த அறிவிப்பு என்பதை குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் நீண்ட நாட்களாக காத்திருந்த அனைவருக்கும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மூலம் பணி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

முக்கியமாக விண்ணப்ப நவம்பர் 17, 2023 முதல் திறக்கப்படும், மேலும் டிசம்பர் 7, 2023 வரை விண்ணப்பிக்க கூடியதாக இருக்கும்.

ஆகையால் இந்த வாய்ப்பு இந்தியா முழுக்க உள்ள அனைத்து SBI பேங்க் கிளைகளிலும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது, ஆகையால் தான் 8773 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இதன் அடிப்படையில் இது சம்பந்தமான முழு விளக்கத்தையும் இந்த வலைதளக் கட்டுரையில் உங்களுக்கு நாங்கள் தமிழ் மொழியில் வழங்க உள்ளோம்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

மேலும் அதிகாரப்பூர்வ SBI அறிவிப்பான 12 பக்க பிடிஎஃப் பைலை பார்க்கவும், பதிவிறக்கம் செய்யும் வாய்ப்புகளும் இந்த கட்டுரையில் கொடுக்க உள்ளோம். எனவே தயக்கமின்றி தகவலை தொடர்ந்து பெறலாம் வாருங்கள்.

SBI Clerk Notification 2023
SBI Clerk Exam 2024

இதன் மூலம் உங்களுக்கு இந்த State Bank of India (SBI) வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அதிக பலன் கிடைக்கக்கூடும் என்று கருதுகிறோம், ஆகையால் தாமதம் இல்லாமல் பயணிக்கலாம் வாருங்கள்.

இந்த SBI Clerk recruitment விண்ணப்பம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக்கூடிய ஒரு வேலைவாய்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வங்கியில் வேலை தேடி காத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வேலை வாய்ப்பு சமர்ப்பணம் செய்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதோடு (SBI Clerk Exam 2024) எஸ்பிஐ வங்கிக்கான கிளர் தேர்வானது 2024 ஆம் ஆண்டு ஏறத்தாழ 8,773 பணியிடங்களை நிரப்புவதற்காக நடக்க உள்ளது.

ஆகாயல் இதற்கான ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்களை தயார் செய்து கொண்டு இந்த வேலை வாய்ப்புக்கான எஸ்பிஐ கிளர்க் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வயது வரம்பு பொறுத்தவரை 01/04/2023 தேதியின் அடிப்படையில் 20 வயதுக்கு குறையாமலும், 28 வயதுக்கு அதிகமாக அமலும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவராக இருந்தால் 02/04/1995க்கு முன்னும் 01/04/2023 க்கு பின்னும் பிறந்தவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • எஸ்சி/எஸ்டி – 5 ஆண்டுகள்
  • ஓபிசி – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/ EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • முன்னாள் ராணுவத்தினர் – 8 ஆண்டுகள், அதிகபட்சத்திற்கு உட்பட்டது. வயது 50 ஆண்டுகள்
  • விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள் – விதவைகள், விவாகரத்து பெற்ற பெண்கள்

எஸ்பிஐயின் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள்:

  • SC/ST – 6 ஆண்டுகள், OBC – 4 ஆண்டுகள், GEN/ EWS – 1 வருடம்.
  • PwBD (SC/ST) – 16 ஆண்டுகள், PwBD (OBC) – 14 ஆண்டுகள்.
  • PwBD (Gen/EWS) – 11 ஆண்டுகள்.

ஊதியம்: ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/- ஆகும் (ரூ.17900/- மற்றும் பட்டதாரிகளுக்கு இரண்டு முன்கூட்டிய உயர்வுகள் அனுமதிக்கப்படும்)

PAY SCALE: Rs.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920.

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடிந்திருக்க வேண்டும். அது இளங்கலை பட்டம் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதிக்கு ஒத்துப் போக வேண்டும். மேலும் இரட்டைப் பட்ட படிப்பான (IDD) சான்றிதழ் கொண்ட விண்ணப்பதாரர்கள் 31/12/2023 அன்று அல்லது அதற்கு முன் ஐஐடியில் தேர்ச்சி பெற்ற தேதி சரியானதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கவனிக்க: மேலும் தேர்வு செய்யப்படும் முறையானது முதன்மை மற்றும் ஆன்லைன் தேர்வு, அதோடு உள்ளூர் மொழி தேர்வு அடங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது நாம் தமிழ்நாட்டில் இருந்து விண்ணப்பிக்கும் போது நமக்கு உள்ளூர் மொழியான தமிழ் மொழியிலும் தேர்வுக்கான வினாக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

பிரிவுசோதனைமதிப்பெண்கேள்வி எண்ணிக்கைதேர்வு நிமிடம்
முதல் பிரிவுஆங்கில மொழியில்303020
இரண்டாவது பிரிவுஎண்ணியல் திறன்353520
மூன்றாம் பிரிவுபகுத்தறியும் திறன்353520

குறிப்பு: மொத்தமாக 100 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகளை நீங்கள் சந்திக்க வேண்டும், ஒரு மணி நேரத்திற்குள் இந்த சவால்களை எதிர்கொண்டு நீங்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை குறிப்பிடத்தக்கது.

மேலே நீங்கள் சந்திக்கவிருக்கும் தேர்வு அனைத்தும் தனித்தனி நேரங்களைக் கொண்டுள்ளது. அதோடு தவறான பதிலை நீங்கள் வழங்கினால் (எதிர்மறையான மதிப்பெண் கழிக்கப்படும்) அதாவது, கேள்விக்கு உதைக்கப்பட்ட மதிப்பெண்ணில் 1/4 எனும் வகையில் கழிக்கப்படும்.

அதோடு தனிப்பட்ட தேர்வுகள் அல்லது மொத்த மதிப்பெண்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் எதுவும் பரிந்துரைக்குப்படாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் எஸ்பிஐ கிளர்க் 2024 தேர்வு எழுதும் போது கவனமாக எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே தகுதியான நபர்கள் (விண்ணப்பதாரர்கள்) நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்ப கட்டத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதற்கான வாய்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கிடைக்கும்.

  1. SC/ ST/ PwBD/ ESM/DESM – கட்டணம் இல்லை
  2. General/ OBC/ EWS – Rs 750/-

அனால், அந்த அறிவிப்பை எங்களுடைய வலைதளத்தின் மூலம் பார்க்க முடியும், அதோடு தகுதிக்கான அளவுகோல் மற்றும் தேர்வு முறை பிற அவசிய விபரங்களை புரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெளிவாக படித்து பாருங்கள், அது கட்டாயம் உங்களுக்கு கூடுதல் உதவியை வழங்கும்.


RECRUITMENT OF JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) (Apply Online from 17.11.2023 TO 07.12.2023)


SBI (Apply Online from 17.11.2023 TO 07.12.2023) கிளார்க் வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

2024 ஆம் ஆண்டு வெளியிடப்படும் எஸ்பிஐ கிளெர்க் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் சில வழிகாட்டுதல் கீழே உள்ளது, அது உங்களுக்கு உதவி புரியும்:

முதல் படி: நீங்கள் எஸ்பிஐ கிளர்க் தேர்வு 2024காண பிரத்தியேகமான pdf ஐ அணுக வேண்டும், அந்த வாய்ப்பு கட்டுரையில் மேலே உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் படி: பதிவு செய்ய வேண்டும் (அப்ளை ஆன்லைன்) என்ற விஷயத்தை கிளிக் செய்து கணக்கை உருவாக்கவும். அதாவது மின்னஞ்சல் முகவரியை தேவையான விவரங்களை எந்த சிக்கல்களும் இல்லாதவாறு துல்லியமாக பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துங்கள்.

மூன்றாம் படி: நீங்கள் சான்றிதழ்களுடன் உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் விண்ணப்ப படிவத்தோடு நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். அதில் தனிப்பட்ட விவரங்களான கல்வி தகுதி மற்றும் பிற தேவையான தகவல்களை உள்ளிட வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள்.

நான்காம் படி: உங்களுடைய புகைப்படம், கையொப்பம் மற்றும் விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள பிற ஆவணங்கள் அனைத்தையும் சரியாக நகலெடுத்து பதிவேற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் ஒரிஜினலையும் நகல் எடுத்து (கலர் ஜெராக்ஸ் எடுத்து) பதிவேற்ற மறக்காதீர்கள்.

ஐந்தாம் படி: ஐந்தாம் படியில் விண்ணப்பம் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கான அறிவுரையை பின்பற்றுங்கள், அந்த அறிவுரை உங்களுக்கு விண்ணப்பிக்கும் பகுதியில் கிடைக்கும். அப்போது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மற்றும் பிற ஆன்லைன் கட்டண முறைகளை பயன்படுத்தி விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.

ஆறாம் படி: இறுதியாக தற்போது உங்கள் கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருந்தால் நீங்கள் இந்த 2024 sbi வங்கி க்ளெர்க் வேலைக்காக வெற்றிகரமாக விண்ணப்பித்து விட்டீர்கள். மேலும் தற்போது நீங்கள் விண்ணப்பித்ததற்கான ஆதாரம் உங்களுடைய மொபைல் அல்லது லேப்டாப் ஸ்கிரீனில் தெரிந்தால் அதை நகலெடுத்து வைத்துக் கொள்ளுங்கள், அல்லது ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தற்போது நீங்கள் உங்களுக்கான (SBI Clerk Notification 2023) தேர்வுக்கான வினாக்களை தேடி படிக்கத் துவங்குங்கள். மேலும் தேர்வு வரும் நாளை எண்ணி காத்திருங்கள், உங்களுக்கு இந்த வேலை கிடைக்க எங்களுடைய வாழ்த்துக்கள்.

வேண்டுகோள்: அதோடு நீங்கள் விருப்பப்பட்டால் நமது தமிழ் உறவுகளுக்கும் இதை பகிரலாம் என்பதை நினைவுபடுத்தி விட்டு விடை பெறுகிறோம், அடுத்து நல்ல வேலை வாய்ப்பு கட்டுரை சந்திக்கிறோம்.

கூடுதல் SBI வேலைவாய்ப்பிற்கு: https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment