இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான SBI காலியிடங்களை அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு நிரப்பி வருகிறது. அதோடு போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்கள் எஸ்பிஐ வங்கி வேலையவாய்ப்பு அறிக்கைக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் 8,283 பணிகளை நிரப்ப SBI Recruitment 2023 அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே இந்தப் பணியிடங்களுக்குத் தேவையான கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற விவரங்களை இங்கே காணலாம்.
SBI Recruitment 2023 காலியிடங்கள்:
Junior Associate (Customer Support & Sales) Clerk Cadre பணியிடங்கள் – 8,283 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளைகளுக்கு அனுப்பப்படுவார்கள்.
SBI Recruitment: No. CRPD/CR/2023-24/27 கல்வித் தகுதி:
கல்வித் தகுதிக்கு, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.
SBI Recruitment 2023 வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆண்டுகள், மற்றும் அதிகபட்சம் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். SBI சட்டத்தின்படி வயது அடிப்படையில் ஓய்வு இருக்கும்.
அதாவது ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். இது பற்றிய விவரங்களை தேர்வு அறிவிப்பில் காணலாம்.
SBI சம்பளம்:
PAY SCALE: Rs.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550- 1730/7-42600-3270/1-45930-1990/1-47920.
ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/- முதல் ரூ.17900/- வரை அளிக்கப்படும்.
SBI Junior Associate தேர்வு செய்யப்படும் முறை:
மெயின் தேர்வு போன்றவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கவனிக்க: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். https://bank.sbi/web/careers/current-openings மற்றும் https://www.sbi.co.in/web/careers/current-openings தளங்களை பயன்படுத்துங்கள். 17.11.2023 Tமுதல் 07.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
கவனிக்க: General/ OBC/ EWS பிரிவுகளுக்கு 750 தேர்வுக் கட்டணமாக உள்ளது. அனால் SC/ ST/ PwBD/ ESM/DESM பிரிவுகளுக்கு தேர்வுக் கட்டணம் இல்லை.
SBI Recruitment 2023 அறிவிப்பு | SBI Jobs 2023 Pdf |
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.