UCO Bank Recruitment 2023: UCO வங்கி புதிய வேலைவாய்ப்பு! ரூ. 69810 சம்பளம் கிடைக்கும்

UCO வங்கி அதிகாரி Manager – Risk Management பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. மொத்தம், 15 இந்த வாய்ப்புகள் உள்ளது.

UCO Bank Recruitment 2023 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆண்டுகள் மற்றும் அதிக வயது வரம்பு 30 ஆண்டுகள்.

விண்ணப்பதாரர்கள் CA/CFA/MBA(FINANCE)/PGDM அல்லது அதற்கு சமமான முழுநேர படிப்பை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் முடித்திருக்க வேண்டும், அப்போதுதான் UCO வங்கி வேலைவாய்ப்பு 2023க்கு தகுதி பெற்ற முடியும்.

குறிப்பு: இந்தியாவில் எங்கும் உங்களுக்கு பனி கிடைக்கலாம் (தமிழ்நாட்டிலும்). ஆகையால் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் சம்பளமாக மாதம் ரூ.69810 பெறுவார்கள். முக்கியமாக UCO Bank Recruitment 2023-இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வங்கியில் சேர்ந்த தேதியிலிருந்து 12 மாதங்கள் உங்களுக்கு நியமனம் கிடைக்கும். அதோடு நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கவனிக்க: தேர்வு செயல்முறைப்படி தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அறிவிப்பு பின்னர் தெரிவிக்கப்படும்.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பொது மேலாளர், UCO வங்கி, தலைமை அலுவலகம், 4வது தளம், H. R. M துறை, 10, BTM சரணி, கொல்கத்தா, மேற்கு வங்காளம் – 700 001 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்கலாம்.

கட்டணத்தை பொறுத்தவரை பொது பிரிவு EWS மற்றும் OBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ. 800 விண்ணப்பக் கட்டணமாகம். மற்றும் SC/ST/PwBD பிரிவினருக்கு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

UCO Bank Recruitment 2023
UCO Bank jobs 2023

UCO Bank Recruitment 2023 பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள்:

UCO வங்கி அதிகாரி கேடரில் மேலாளர்- இடர் மேலாண்மை (Manager – Risk Management) பணியிடங்களுக்கு, 15 இடங்கள் காலியாக உள்ளன.

UCO Bank Recruitment 2023 பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் 2023
UCO Bank Recruitment 2023

UCO வங்கி வேலைக்கான வயது வரம்பு:

UCO வங்கி வலைக்கு வயது வரம்பு பொறுத்தவரையிலும் விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறைவாக இருக்கக்கூடாது. 30 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.

UCO Bank Recruitment 2023க்கான சம்பளம்:

UCO வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் Rs 48170-1740/1-49910-1990/10-69810 சம்பளம் கிடைக்கும்.

UCO Bank Recruitment 2023க்கான சம்பளம்
UCO Bank jobs 2023

Manager – Risk Management வேலைக்கான தேவைகள்:

UCO வங்கி தேவையான தகுதிகள்:

கல்வி தகுதி: விண்ணப்பதாரர் CA/CFA/MBA(FINANCE)/PGDM அல்லது அதற்கு சமமான படிப்பை அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்தில் இருந்து முழுநேர படிப்பாக முடித்திருக்க வேண்டும்.

கூடுதல் தகுதிகள்: விண்ணப்பதாரர், உலகளாவிய இடர் மேலாளர்/புரொபஷனல் அசோசியேஷன் ரிஸ்க் மேனேஜ்மென்ட் சான்றிதழின் பிஆர்எம்ஐஏ (PRMIA) இன்ஸ்டிடியூட்டில் இருந்து நிதி இடர் மேலாண்மையில் நிபுணத்துவ சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்: விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருடம். மற்றும் வங்கியில் குறைந்தபட்சம் 02 வருட பின்னணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

UCO Bank Recruitment 2023க்கான பணியிடம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் வங்கியின் தேவைகளுக்கு ஏற்ப பணியமர்த்தப்படுவார். அதாவது இந்தியாவில் எங்கும் வேலை செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

Manager – Risk Managementக்கான தேர்வு நடைமுறை:

UCO வங்கி ஆட்சேர்ப்பு 2023க்கான நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வுச் செயல்முறையின் தேதி, நேரம் மற்றும் இடம் ஆகியவை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

UCO வங்கி விண்ணப்பக் கட்டணம்:

UCO வங்கி விண்ணப்ப செயல்முறையை முடிக்க விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்:

  • பொது, EWS மற்றும் OBC-க்கு ரூ. 800 விண்ணப்பக் கட்டணம்.
  • SC/ST/PwBD வகை விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

கவனிக்க: கட்டணம் செலுத்துவதற்கான தேதி: 05.12.2023 முதல் 27.12.2023 வரை.

UCO Bank Recruitment 2023க்கு விண்ணப்பிப்பது எப்படி:

UCO வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை General Manager, UCO Bank, Head Office, 4th Floor, H. R. M Department, 10, BTM Sarani, Kolkata, West Bengal – 700 001 என்ற முகவரிக்கு அனுள்ளுங்கள்.

தனலட்சுமி வங்கியில் வேலை! பட்டப்படிப்பு முடித்தவுடன் செம சான்ஸ்! வாருங்கள் விண்ணப்பிக்க!

கவனிக்க: அஞ்சல் மூலம் ஆஃப்லைன் விண்ணப்பத்தைப் பெறுவதற்கான கடைசி தேதி 27.12.2023ஆகும். மேலும் எந்த விண்ணப்பங்களும் ஆன்லைனில் பெறப்படாது மற்றும் குறிப்பிட்ட தேதிக்கு அப்பால் கிடைக்கும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

கூடுதல் வங்கி வேலைகள்!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment