செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தப் பணிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புதல் 2024!
அறிவிப்பு: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பளிக்கப்பட்ட கீழ்காணும் தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்ய விண்ணப்பங்கள் 08.03.2024 அன்று மாலை 05.45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
- சித்தா மருத்துவர்
- சித்தா மருத்துவர் அலுவலர் (Siddha)
- யுனானி மருத்துவ அலுவலர் (Unani)
- மருந்தாளுநர் (Pharmacist)
- மருந்து வழங்குபவர் (Dispenser)
- பல்நோக்குப் பணியாளர்கள் (Multipurpose Workers)
பொதுவாக அங்கீகரிக்கப்படும் படிப்பு: பி.யு.எம்.எஸ், டிப்ளமோ இன்டகிரேட்டட் பார்மசி, டி.பார்ம்/ இன்டகிரேட்டட் பார்மசி, மேலும் அறிய அறிவிப்பை பார்க்கலாம்.
சம்பளம் பணிக்கு ஏற்ப மாறுபடும்:
- (நாள் ஒன்றுக்கு) ரூ.750/-
- ரூ.34,000/- (ஒரு மாதத்திற்கு)
குறிப்பு:
- விண்ணப்ப படிவங்கள் https://chengalpattu.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பின்னர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இவ்விண்ணப்பத்துடன் பணியிடங்களுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகல்களை சுய சான்றொப்பமிட்டு (Self attested) சமர்ப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவே வரவேற்கப்படுகின்றன.
- 08.03.2024 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
நிபந்தனைகள்:
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்படமாட்டாது.
பணியில் சேருவதற்கான மேற்கண்ட நிபந்தமைக்கு கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society), செங்கல்பட்டு மாவட்டம்-603001, தொலைபேசி எண்: 044-29540261.
Chengalpattu District DHS Vacancies Notification Pdf 2024
Chengalpattu District DHS Vacancies Application Pdf 2024
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.