கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடை களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, இந்த அரசாணையின் அடிப்படையில் 183 காலி பணியிடங்கள் வந்துள்ளது.
இதற்க்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 14/11/2022 அன்று நீக்கப்பட்டுள்ளது.
மேலும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், நாயவில்லை கடை வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, இணைக்க வேண்டிய ஆவணங்கள் போன்ற பல விஷயங்களை இந்த வலைதள கட்டுரையில் தெளிவாக பார்க்க உள்ளோம், இது தமிழ் மக்களுக்கான ஒரு சிறந்த உதவியாக இருக்கும் என்று கருதி இதை வடிவமைத்துள்ளோம்.
இருவிதமாக இந்த வேலையானது பிரிக்கப்பட்டுள்ளது அதாவது விற்பனையாளர் மற்றும் கட்டுநர், இந்த பணிகளுக்கான முழு விவரங்களை தெளிவாகக் இங்கு காணலாம்.
அனைவருக்கும் இது உதவியாக இருக்கும், அதோடு தமிழ் மக்களுக்கான சிறந்த அரசாங்க வேலைவாய்ப்பை பெறுவதற்கான ஒரு வழி யாகவும் இருக்கும்.
கல்வித்தகுதி என்ன?
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம், இதில் இரு தனித்தனி கல்வித்தகுதி கூறப்பட்டுள்ளது.
விற்பனையாளரை பொறுத்த அளவு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான ஏதேனும் ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த கட்டமாக கட்டுநர் பணிக்கான தகுதியை பொருத்தவரை பள்ளி இறுதி வகுப்பு சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி போன்ற விவரங்களை சேகரிக்க வேண்டும், இவைகளை நீங்கள் முடித்திருந்தால் நிச்சயம் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலைக்கான ஊதிய விபரம் என்ன?
இதனக்கான ஊதியத்தை பொருத்தவரை ஒவ்வொரு பதவிக்கு ஏற்ப ஊதியம் மாறுபடுகிறது, இதில் நாம் தோராயமாக எடுத்துக்கொண்டால் 8,600 தொடங்கி 29,000 வரை ஊதியம் இருக்கும்.
இதில் ஒவ்வொரு பணிக்கு தகுந்தாற் போன்ற தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையில் நேரடியாகப் படித்துப் பார்க்கும் வகையில் Pdf கொடுக்கப்பட்டுள்ளது, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதன் மூலம் கூடுதல் விளக்கங்கள் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TN Ration Shop |
துறை | ரேஷன் கடை ஆட்சேர்ப்பு |
இணையதளம் | Drbcbe.in |
கடைசி தேதி | 14/11/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, கோவை |
தேர்வு முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
முகவரி | தலைவர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பாளர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம், கூட்டுறவு வளாகம், ஆரோக்கியசாமி சாலை, கே.கே புதூர் கோயம்புத்தூர் – 641 038 |
வேலைக்கான காலிபணியிடங்கள்?
நாம் கட்டுரையில் பார்த்தது போல் இந்த வேலைக்கான காலி பணியிடங்கள் ஆக மொத்தம் 183 காலிப்பணியிடங்களை நம்மால் பார்க்க முடிகிறது.
அதில் வகுப்பு வாரியாக காலிப்பணியிடங்கள் பிரிக்கப்பட்டுள்ளது, அந்த பணியிடங்களில் முழு விவரங்களை நாம் கிழே பார்க்கலாம்.
வகுப்பு | விற்பனையாளர் | கட்டுநர் |
---|---|---|
(GT) பொதுப்பிரிவினருக்கு | 46 | 25 |
(BC) பிற்படுத்தப்பட்டோர் | 41 | 21 |
BC(M) பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர் | 5 | 3 |
(MBC/DNC) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் | 31 | 16 |
(SC) ஆதி திராவிடர் | 23 | 12 |
SC(A) ஆதிதிராவிடர் அருந்ததியர் | 5 | 3 |
(ST) பழங்குடியினர் | 2 | 0 |
இது போன்ற வகையில் பதவிகள் காலியாக உள்ளது, இதன் முழு விவரத்தை நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் காணமுடியும்.
வேலைக்கான வயது?
வயது வரம்பை பொறுத்தவரை வகுப்பு வாரியாக மாற்றப்பட்டுள்ளது, இந்த வயது சம்பந்தப்பட்ட முழு தகவல்களை உங்களுக்கு கிழே கிடைக்கும்.
இருந்தபோதும் இதில் சில பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என்றும், சில பிரிவினருக்கு 32 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தோராயமாக நீங்கள் 18 வயது முதல் 42 வயதை கடக்காமல் இருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்,விண்ணப்பம் சம்பந்தப்பட்ட வயது வரம்பு குறித்த தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்?
150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது, அதையும் தெளிவாக காணமுடியும் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், இருப்பினும் கட்டணம் செத்தும் முறைப்பற்றிய தகவலை கேழே இணைத்துள்ளோம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பு நீங்கள் திகாரப்பூர்வ அறிவிபை பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள், அல்லது நேரடியாக கிழே படிக்கமுடியும், அது உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
தமிழ்மொழியில் வழங்கியதும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் அனைத்து விஷயங்களும் தெளிவாக படித்து பார்த்து உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் தெளிவாக சேகரித்துக் கொள்ளுங்கள்.
இணைக்க வேண்டிய ஆவணங்கள்லில் நாம் முக்கியமான கவனத்தைச் செலுத்த வேண்டும், அதில் முதலில் நீங்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான ரசீதை இணைக்க வேண்டும், அதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தி இருக்கலாம், இருந்தாலும் அதற்கான விண்ணப்ப கட்டண ரசீதை நீங்கள் இணைக்க வேண்டும்.
- அதோடு முன்னாள் ராணுவத்தினர் என்றால் அதற்கான ஆதாரம்.
- ஆதரவற்ற விதவை என்றால் அதற்கான ஆதாரம்.
- மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான ஆதாரம்.
- வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை
- குடும்ப அட்டை
- நிர்ணயிக்கப்பட்ட கல்வி தகுதி சான்றிதழ்
- விண்ணப்பதாரரின் சான்றிதழ்
- விண்ணப்பதாரரின் கையெழுத்து
- விண்ணப்பதாரரின் புகைப்படம்
இது போன்ற விஷயங்களை தெளிவாக இணைத்து விண்ணப்பிக்க வேண்டும், இது ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க கூடியது.
நீங்கள் பதிவேற்றம் செய்யக்கூடிய ஆதாரத்தின் அளவு முதல் 50kp முதல் 200kp தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
Coimbatore District ration shop Recruitment 2022 pdf
[dflip id=”2847″ ][/dflip]
அரியலூர் | 75 | 10th | கிளிக் |
செங்கல்பட்டு | 178 | 10th,12th | கிளிக் |
சென்னை | 344 | 10th,12th | கிளிக் |
கோயம்பத்தூர் | 233 | 10th,12th | கிளிக் |
கடலூர் | 245 | 10th | கிளிக் |
தர்மபுரி | 98 | 10th | கிளிக் |
திண்டுக்கல் | 312 | 10th,12th | கிளிக் |
ஈரோடு | 243 | 10th,12th | கிளிக் |
காஞ்சிபுரம் | 274 | 10th,12th | கிளிக் |
கன்னியாகுமரி | 134 | 10th,12th | கிளிக் |
கரூர் | 90 | 10th,12th | கிளிக் |
கள்ளக்குறிச்சி | 116 | 10th | கிளிக் |
கிருஷ்ணகிரி | 146 | 10th | கிளிக் |
மதுரை | 163 | 10th,12th | கிளிக் |
மயிலாடுதுறை | 150 | 10th,12th | கிளிக் |
நாகப்பட்டினம் | 98 | 10th | கிளிக் |
நாமக்கல் | 200 | 10th,12th | கிளிக் |
நீலகிரி | 76 | 10th,12th | கிளிக் |
பெரம்பலூர் | 58 | 10th,12th | கிளிக் |
புதுக்கோட்டை | 135 | 10th | கிளிக் |
இராமநாதபுரம் | 114 | 10th | கிளிக் |
ராணிப்பேட்டை | 118 | 10th | கிளிக் |
சேலம் | 276 | 10th,12th | கிளிக் |
சிவகங்கை | 103 | 10th,12th | கிளிக் |
தென்காசி | 83 | 10th | கிளிக் |
தஞ்சாவூர் | 200 | 10th,12th | கிளிக் |
தேனி | 85 | 10th | கிளிக் |
திருப்பத்தூர் | 75 | 10th | கிளிக் |
திருவாரூர் | 182 | 10th,12th | கிளிக் |
தூத்துக்குடி | 141 | 10th,12th | கிளிக் |
திருநெல்வேலி | 98 | 10th | கிளிக் |
திருப்பூர் | 240 | 10th,12th | கிளிக் |
திருவள்ளூர் | 237 | 10th,12th | கிளிக் |
திருவண்ணாமலை | 376 | 10th,12th | கிளிக் |
திருச்சி | 231 | 10th,12th | கிளிக் |
வேலூர் | 168 | 10th,12th | கிளிக் |
விழுப்புரம் | 244 | 10th | கிளிக் |
விருதுநகர் | 164 | 10th,12th | கிளிக் |
கவனியுங்கள்:
இந்த அரசாங்க வேலையை கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் பகிருங்கள், நாங்கள் தமிழ்மொழியில் மிகத் தெளிவாக இந்த தகவலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இந்த கட்டுரையை துவங்கினோம்.
இந்த கட்டுரை அனைவருக்கும் பகிரும் மூலம் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
இந்த விஷயத்தைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள், தொடர்ந்து வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தகவலை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.