கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக வந்த அரசு பணியிடங்களுக்கு (Regional Coordinator, Regional Manager) பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(TNSRLM) ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இதில் 33 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிகளுக்கும் மற்றும் வட்டார மேலாளர் பணிகளுக்கும் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இது சம்மந்தமாத கூடுதல் தகவலை தெளிவாக காணலாம் வாருங்கள்.
ஊரக வாழ்வாதார இயக்கத்தின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இதற்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் 12 வட்டாரங்களில் காலியாக உள்ள 33 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் அறிவித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 12 வட்டாரங்களில் 33 ஒருங்கிணைப்பாளர் வேலை மதுக்கரை மற்றும் தொண்டாமுத்தூர் மாவட்டங்களில் மேலாளர் பணிகளுக்காகவும் காலியாக உள்ள இடங்களை மாவட்ட அளவிலான போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று குறிப்பிட பட்டுள்ளது.
மேற்கண்ட முக்கியமான பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் வட்டார மேலாளர் மாவட்ட மேலாளர் பணிக்கு ரூபாய் 15,000 ஊதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 12000 ஊதியமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த இரண்டு பணியிடங்களுக்கும் குறைந்த பட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், மேலும் ஏதோ ஒரு பட்டப்படிப்பை முடித்து எம்எஸ் ஆபீஸ் தொடர்பான 6 மாத சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி என்ன?
இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மாவட்டத்துக்குள் குடியிருக்கும் நபராகவும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர் அந்த மாவட்டத்துக்குள் குடியிருப்பவர் ஆகும் இருத்தல் அவசியம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தின் குறைந்தது இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்கலாம் என்றும், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை?
இரண்டு பணியிடங்களுக்கும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தகுதியுள்ள பெண்கள் 23 செப்டம்பர் தேதிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறியதோடு, இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TNSRLM |
துறை | (ஊரக வாழ்வாதார இயக்கம்) |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | TNSRLM Recruitment 2022 |
கடைசி தேதி | 23/09/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, கோயம்புத்தூர் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.