(திண்டுக்கல்) Rs. 62,000/- ஊதியத்தில் அரசு வேலை, 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்

நீங்கள் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் Rs. 62,000/- ஊதியத்தில் அரசு வேலை பெறுவதற்கான வாய்ப்பு வந்துள்ளது, இதற்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டத்தின் அதிகாரபூர்வ வலை தளத்தின் மூலம் வெளியிடப்பட்ட இந்த (Tamil Nadu Rural Development) அரசு வேலைக்கான அறிவிப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை தமிழ் மொழியில் உங்களுக்கு தொகுத்து வழங்குகிறோம், கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ வலை தளத்தை பார்க்கலாம், அதற்கான வாய்ப்பையும் நாங்கள் கீழே உருவாக்கியுள்ளோம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும், இந்த வேலைக்கான கல்வித்தகுதி, எவ்வாறு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது, எந்த விலாசத்திற்கு அனுப்புவது போன்ற பல கேள்விகளுக்கு இந்த வலைதள கட்டுரையில் பதில் கிடைக்க உள்ளது.

இந்த வேலையைப் பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டு சொந்த ஊரிலேயே (TNRD) அரசு வேலையில் அதிக சம்பளத்தில் பணிய பெறுவதற்காண வாய்ப்பை பெற தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் 01/08/2022 வரையுள்ள காலியான பணியிடங்களில் 5 ஓட்டுநர்கள் மற்றும் 4 அலுவலக உதவியாளர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி நியமனம் துவக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு தகுதியானவர்கள் நேரடி நியமனம் மூலம் பணி அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இது சம்பந்தமான விவரங்களை தெளிவாக காணலாம்.

கல்வித்தகுதி மற்றும், இதர தகுதி என்ன?

ஓட்டுனரை பொறுத்தவரை 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மோட்டார் வாகன சட்டம் 1988 (மத்திய சட்டம் 59/1988) அடிப்படையில் தமிழக அரசின் தகுந்த அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டி நடைமுறை அனுபவமும் அந்த நபருக்கு இருக்க வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அலுவலக உதவியாளரை பொறுத்தவரை 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இவைகளை சரிபார்த்து நேர்காணல் மூலம் இந்த பணி வழங்கப்படுகிறது.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பை பொருத்தவரை ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனியாக வயதுவரம்பு பொருள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் குறைந்தபட்ச வயது 18 ஆகவும் அதிகபட்ச வயது 42 குறிப்பிடப்பட்டுள்ளது, ஒவ்வொரு பிரிவினர் பற்றிய தெளிவான விளக்கங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு காணலாம், கீழே அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியம் இரு வழியில் கிடைக்கும், அதாவது நாம் மேலே குறிப்பிட்டது போல் ஓட்டுநருக்கான தனி ஊதியமும், அலுவலக உதவியாளர்க்கு தனி ஊதியமும் வழங்கப்படுகிறது.

இதில் அலுவலக பணியாளர் ஊதியம் 15,700/- இல் தொடங்கி 50,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ஓட்டுனர் ஊதியத்தை பொருத்தவரை குறைந்தபட்சமாக 19,500/- தொடங்கி 62,000/- இல் முடிவடைகிறது. தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட ஊதியத்தில் பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பம் பெறப்படும் கடைசி நாள்?

இந்த அறிவிப்பானது அரசால் வெளியிடப்பட்ட தேதி 13/09/2022 ஆகும், ஆனால் விண்ணப்பத்தை நீங்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டிய இறுதி தேதி ஆனது 12/10/20 22 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு உங்கள் விண்ணப்பத்தை நீங்கள் அனுப்ப வேண்டும்.

அனுப்பும்போது சமூக முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை 30/- ஒட்டி அனுப்ப வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது, அதைப் பற்றிய தெளிவான விவரங்களும், அனுப்ப வேண்டிய விலாசம் உங்களுக்கு கீழே கிடக்கும், அந்த முகவரியை பின்தொடர்ந்து அனுப்புங்கள்.

எவ்வாறு இந்த பணிக்கு விண்ணப்பிப்பது?

இந்த பணிக்கு விண்ணப்பிப்பது மிகவும் சுலபம், அதாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலில் நீங்கள் அணுக வேண்டும், அதற்கான உதவியை எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் பெறலாம்.

அங்கு அதிகாரப்பூர்வ விளம்பரத்தையும், அறிவிப்பையும் நன்கு படித்துப் பாருங்கள், பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யுங்கள், அதோடு உங்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பம் கிடைக்கும்.

அந்த விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்து உங்களுடைய ஆவணங்களை இணைக்க மறக்காதீர்கள், நீங்கள் அலுவலக உதவியாளராக விண்ணப்பிக்க உளீர்களா அல்லது வாகன ஓட்டுநர் கேட்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்தி அதற்கு தேவையான ஆவணங்களை இணைத்து கொள்ளுங்கள்.

பின்பு மேலே குறிப்பிட்டவாறு நீங்கள் உங்கள் விண்ணப்பத்தோடு சமூக முகவரியுடன் கூடிய அஞ்சல் விலை ரூபாய் 30 ஒட்டி கிழே குறிப்பிடப்பட்ட விலாசத்திற்கு அனுப்பவேண்டும்.

அனுப்பவேண்டிய விலாசமானது: மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), 154 வளர்ச்சிப் பிரிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திண்டுக்கல் 624004 ஆகும்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புTamil Nadu Rural Development
துறை(தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை)
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்கTNRD Recruitment 2022
கடைசி தேதி12/10/2022
வேலை இடம்தமிழ்நாடு, திண்டுக்கல்
பதிவுமுறையை(Post) மூலமாக
jobstn Whatsapp Group GIF Jobs Tn

கவனியுங்கள்:

தமிழ்நாட்டில் சொந்த ஊரில் அரசு வேலையில் சேர வேண்டும் என்று நினைக்கும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.

நீங்கள் திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவரா இருந்தால் நிச்சயம் இந்த வலைதள கட்டுரையை அனைவருக்கும் பகிருங்கள்.

இதன் மூலம் ஒரு நல்ல ஊதியத்தில் ஒரு மரியாதைமிக்க அரசு வேலையை பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும், ஒருவேளை நீங்கள் நல்ல பணியில் இருக்கிறீர்கள் என்றால் உங்கள் சுற்றத்தார், நண்பர்களுக்கு இதை பகிருங்கள் அவர்கள் முயற்சிக்கும் வெற்றி கிடைக்கும்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment