இந்தியாவின் மோசடி விசாரணை அலுவலகம் மூலம் வெளிவந்த வேலைவாய்ப்புகளில் முழுப்பட்டியல் தான் இந்த வலைதள பகுதி.
அதாவது, Fraud Investigation Office சுருக்கமாக (SFIO) ஐயோ என்று அழைக்கக்கூடிய இந்த துறையில் புதிதாக 22 வேலைவாய்ப்புகள் மற்றும் இதர பணிகளுக்கான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகபட்ச ஊதியமாக 2,09,200 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதை நாம் குறிப்பாக பார்க்க வேண்டியதாக உள்ளது, தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த விண்ணப்பத்தை நாம் அனுப்புவதற்கான கடைசி தேதி 14/10/2022, அதற்குள் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் அனுப்ப வேண்டும், அது சம்பந்தமான உதவியை தான் இந்த வலைதள கட்டுரையில் நீங்கள் காண உள்ளீர்கள்.
இதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் எடுக்கப்பட்ட சில தகவல்களை தமிழ்மொழியில் வழங்க முயற்சிக்க உள்ளோம், அது மட்டுமில்லாமல் அதிகாரபூர்வ வலை தளத்தை அணுகவும், இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து உங்களால் காண முடியும், அதற்கான உதவியையும் இந்த வலைதள கட்டுரையில் நீங்கள் பார்க்கலாம், வாருங்கள் தொடர்ந்து இந்த கட்டுரையில் நாம் பயணிக்க துவங்கலாம்.
வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை மூன்று விதமாக வழங்கப்படுகிறது, அதில் நிலை 12, நிலை 11, மற்றும் நிலை 10 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் நம்மால் குறைந்தபட்ச ஊதியமாக 56,100 மற்றும் அதிக பட்ச ஊதியமாக 2,09,200 பார்க்க முடிகிறது.
Level 12: 78800 to 209200
12 – Level 11: 67700 to 208700
Level 10: 56100 to 177500
எனவே இந்த வேலைக்கான நிலை பொறுத்து நமக்கு ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.
கல்வி தகுதி என்ன?
வேலை கல்வி தகுதியை பொறுத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு முலமாக நம்மால் காண முடியவில்லை, இருந்தாலும் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இது சம்பந்தமான தகவல்கள் கிடைக்கக்கூடும், அங்கு சேரும் வாய்ப்பு இந்த கட்டுரையில் உள்ளது.
இருந்தாலும் படித்து முடித்தவர்கள், பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பித்து பணியை பெறமுடியும் என்று கருதப்படுகிறது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | SERIOUS FRAUD INVESTIGATION OFFICE |
துறை | (SFIO) மோசடி விசாரணை துறை |
சம்பளம் | Rs. 56,100/- to Rs. 2,09,200/- |
திறக்கும் தேதி | 19/09/2022 |
கடைசி தேதி | 14/10/2022 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
பதிவுமுறையை | அறிவிப்பு முலமாக |
பதிவு செய்வது எப்படி?
இந்த வேலைக்கு நீங்கள் பதிவு செய்வதற்கு அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிப்பை அணுக வேண்டும், ஆனால் அறிவிப்பானது சிறிய ஒரு பகுதியை தன்னுள் அடக்கியுள்ளது.
- அறிவிப்பை தெளிவாக படித்து பார்ப்பதற்கு ஏதுவாக முதலில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- பின்பு அறிவிப்பு வெளியான அதிகாரபூர்வ வலை தளத்தை திறந்து அங்கு இது சம்பந்தமான தகவல்களை நன்கு பார்க்க வேண்டும்.
- பின்பு உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணம் மற்றும் கூடுதல் தகுதி சான்று போன்றவற்றை இணைத்து உங்களுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
- உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்ணை சரியாக பூர்த்தி செய்யுங்கள், அப்போதுதான் உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக இருக்கும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வலைதளம் மூலமாக உங்களால் பதிவேற்றம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் பதிவேற்றம் செய்யுங்கள் அல்லது இந்த விலாசத்திற்கு (Printing at Government of India Press, Ring Road, Mayapuri, New Delhi-110064 and Published by the Controller of Publications, Delhi-110054) சரியான முறையில் விரைவு தபால் அனுப்புங்கள்.
- நீங்கள் அனுப்பும் விரைவு தபால் ஆனது 14/10/2022 அன்றுக்குள் சென்றடையும் வகையில் அனுப்புங்கள், அனுப்புவதற்கு முன்பு அனைத்து ஆவணங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அனுப்புங்கள்.
கவனியுங்கள்:
பல அரசாங்க வேலைகளில் பட்டியலை மிகத்துல்லியமாக உரிய நேரத்திற்கு முன்பே உங்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
நீங்களும் இதை தமிழ் மக்களுக்காக தமிழ் வாட்ஸ்அப் குரூப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் பகிருங்கள், அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்.
மேலும் வருங்கால கட்டுரைகளுக்காக எங்கள் வலை தளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.