IIITDM காஞ்சிபுரம் வேலைகள் மாதம் ரூ.35,000/- விரைவாக விண்ணப்பிக்கவும்!

இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM காஞ்சிபுரம்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (Junior Research Fellow – ECE Department) பணியிடம் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IIITDM காலியிடங்கள்: ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிக்கு காஞ்சிபுரத்தில் IIITDM இல் ஒரு (01) பதவி மட்டுமே காலியாக உள்ளது.

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ கல்வி தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் CSE, ECE ஆகியவற்றில் BE, B.Tech, ME, M.Tech பட்டப்படிப்பு முடித்தவர்கள் மட்டுமே இந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

வயது: IIITDM காஞ்சிபுரம் கல்வி நிறுவனத்தில் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ வேலைக்கான சம்பளம்: தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வழங்கப்படும்.

IIITDM தேர்வு செயல்முறை: ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பதவிக்கான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி: இந்த IIITDM காஞ்சிபுரம் இன்ஸ்டிடியூட் வேலைக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 01.12.2023 க்கு முன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் Google படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் இடம்: இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம், காஞ்சிபுரம் மேலக்கோட்டையூர், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில், சென்னை-600127.

 IIITDM Kancheepuram Project Junior Research Fellow (1 Position) last date to apply 01 12 2023
IIITDM Kancheepuram Project Junior Research Fellow (1 Position) last date to apply 01 12 2023
அறிவிப்புiiitdm.ac.in
பதவிJunior Research Fellow (1 Position) 
சம்பளம்Rs. 31,000 p.m (first 2 years) and Rs. 35,000
காலியிடம்1
பணியிடம்IIITDM Kancheepuram
தகுதிகள்B.E/B.Tech, M.E/M.Tech
விண்ணப்பிக்க கடைசி தேதி01/12/2023

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment