JobsTn.in
- மாவட்டம்: கன்னியாகுமரி
- அறிவிப்பு: IDSP
- வேலை: தகவல் மேலாளர் மற்றும் ஒரு ஆய்வக உதவியாளர்
- பணியிடங்கள்: ஒப்பந்த அடிப்படையில்
- முடிவுத் தேதி: 21/06/2024 முதல் 05/07/2024 வரை
மாவட்ட சுகாதார அலுவலகத்திற்குட்பட்ட IDSP திட்டத்தின் கீழ் உள்ள ஒரு தகவல் மேலாளர் மற்றும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.
தகவல் மேலாளர் பணி
எனவே, தொகுப்பூதியமாக தகவல் மேலாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக கணினி அறிவியலில் முதுநிலை பட்டம், அல்லது பொறியியல் பட்டப்படிப்பு (IT/ Electronics) இருத்தல் அவசியம். மேலும், இதற்க்கு ஊதியம் ரூ.20000/- ஆகவும் உள்ளது.
ஆய்வக உதவியாளர் பணி
ஆய்வக உதவியாளர் பணியிடத்திற்கு கல்வித்தகுதியாக 8-ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும் எனவும், மாத தொகுப்பூதியமாக ரூ.8500/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்றும் இவ்ஒப்பந்த பணியிடம் தொடர்பான தகுதிகள், வயது வரம்பு, இனசுழற்சி விண்ணப்ப படிவங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை இவ்இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 05.04.2024 மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன்கோவில், நாகர்கோவில்-1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.