Rs. 66,000/- ரூபாய் ஊதியத்தில் அரசு வேலை காரைக்காலில், தமிழனுக்கு கிடைக்க என்னவழி?

தமிழ்நாட்டில் பணிபுரியக்கூடிய சிறந்த (ONGC) மத்திய அரசின் வேலை வாய்ப்பை இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளீர்கள்.

அதாவது எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் சுருக்கமாக (ONGC) என்று கூறுவார்கள், இந்த நிறுவனமானது Rs. 66,000/- ஊதியமாக கொண்ட பணியிடங்களை அறிவித்துள்ளது.

இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறது, மேலும் நீங்கள் தபால் மூலம் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Oil and Nattural Gas Corporation வேலை சம்பந்தமான தகவல் தான் இந்த வலைதள கட்டுரையில் தமிழ் மொழியில் நீங்கள் படிக்க உள்ளீர்கள்.

அதாவது நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன் வெளியிட்ட இந்த (Advt. No. HRD/2/2022 (R&P) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை துவங்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கு தகுதியானவர்கள் விளம்பரத்தின் அடிப்படையில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம் என்றும் கூறியுள்ளது. எனவே அந்த அறிவிப்பில் வெளிவந்திருக்கும் தகவல்களை சேகரித்து உங்களுக்கு வழங்க உள்ளோம்.

இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் தகவலானது இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, வேலை செய்யக்கூடிய மாவட்டம் மற்றும் கடைசி தேதி, வேலைக்கான கல்வித்தகுதி போன்ற பல விஷயங்களை தொகுத்து தன்னுள் அடக்கிய தகவலாகும், வாருங்கள் தொடர்ந்து தகவல்களை சுருக்கமாகவும் அதே சமயம் தெளிவாகவும் காணலாம்.

https://telegram.me/kktnjobs

வேலைக்கான வயது வரம்பு என்ன?

வேலை பொருத்தவரை இரண்டு விதமான வேலை வழங்கப்படுகிறது அதில் ஒரு வேளைக்கு 63 வயதை கடக்காமல் இருக்க வேண்டும் என்றும், மற்றொரு வேலைக்கு 65 வயதை கடக்காமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து ஒரு விஷயத்தை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம், அனுபவசாலிகளுக்கு இந்த பணியானது வழங்கப்படலாம்.

எனவே சில அனுபவங்களை உடையவர்களாக இருக்க வேண்டும், அது பற்றிய தெளிவான விளக்கங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் காணலாம்.

ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் அடிப்படையில் 66,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது, மேலும் சில இதர படிகளும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Oil and Natural Gas Corporation Limited) அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் தெளிவாக படித்து பார்க்கும் போது இது சம்பந்தமான கூடுதல் விளக்கங்களை நீங்கள் தெரிந்து கொள்ளலாம், அந்த அறிவிப்பானது ஆறு பக்கங்களைக் கொண்டதாக இருக்கின்றது.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புOil and Natural Gas Corporation Limited
துறை(ONGC) எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை
திறக்கும் தேதி19/09/2022
கடைசி தேதி30/10/2022
வேலை இடம்தமிழ்நாடு, காரைக்கால்
பதிவுமுறையை(Online & Offline) மூலமாக
தொடர்பு கொள்ளவும்hrd_cauvery@ongc.co.in

வேலைக்கான கல்வித்தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை டிப்ளமோ படித்தவர்கள் வரை துவங்கி பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும்.

(Degree or Diploma in Engineering) இந்த படிப்புகளை முடித்தவர்கள் இந்த வேலைக்காக நிச்சயம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு எப்படி இருக்கும்?

நீங்கள் பூர்த்தி செய்து அனுப்பிய ஆவணங்களை சரிபார்த்து தேர்வுக்கு உங்களை அழைப்பார்கள், அப்போது உங்கள் ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் உங்களுக்கு இந்த பணி வழங்கப்படுகிறது.

அதில் (Medically fit, Period of engagement: 02 years (initial 01-year contract to be extended by another year if required). awarded marks (Max. 80 marks) என குறிப்பிடப்பட்டது.

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள், அதற்கான வாய்ப்பு வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்கும் போது கிடைக்கும்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் காலி பணியிடங்கள் எத்தனை?

இந்த வேலை காலி பணியிடங்கள் மொத்தம் 11, வேலைக்கு விண்ணப்பிப்பது, தபால் மூலமும் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

  • முதலில் நீங்கள் அதிகாரபூர்வ ONGC மூலம் இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு எங்கள் வலைதளத்தின் மூலம் நீங்கள் பெறலாம்.
  • அடுத்தகட்டமாக அதில் கொடுக்கப்பட்டுள்ள 6 பக்க தகவல்களையும் தெளிவாக படித்து பாருங்கள், அதில் நீங்கள் விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பமும் அடங்கி இருக்கும்.
  • அனைத்து விஷயங்களையும் தெளிவாக படித்தபிறகு அந்த விண்ணப்பத்தை நீங்கள் நகலெடுத்து உங்களுடைய படிப்பு சார் ஆவணங்கள் மற்றும் கூடுதல் தகுதி ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து சரியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பூர்த்தி செய்யும் போது உங்களை தொடர்பு கொள்வதற்கான மொபைல் நம்பர் மற்றும் ஜிமெயில் ஐடி போன்ற தொடர்பு சார்ந்த விஷயங்களை தெளிவாக பூர்த்தி செய்யுங்கள்.
  • அனைத்து தகவலும் பூர்த்தி செய்யப்பட்டதா என்பதை மறுமுறை உறுதி படுத்திய பிறகு உங்கள் விண்ணப்பத்தை நகல் எடுத்துக் கொள்ளுங்கள்.

இறுதியாக வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஜிமெயில் ஐடி (hrd_cauvery@ongc.co.in) மூலம் நீங்கள் உங்கள் ஆவணங்களை கையொப்பமிட்டு கலர் ஸ்கேன் எடுத்து அனுப்ப முடியும்.

அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு தபால் மூலம் அனுப்புங்கள், நீங்கள் அனுப்பக்கூடிய தபால் ஆனது 30/09/2022-க்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

  • CGM(HR)-I/c HR-ER, ONGC, Cauvery Asset, Neravy, Karaikal, Pin code: 609604.
வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

தமிழகத்தில் கிடைக்கக்கூடிய இந்த மத்திய அரசாங்கத்தின் வேலையை நம் தமிழ் மக்கள் பெற்றிட இந்த வலைதள கட்டுரையை வடிவமைத்தோம், அவர்களுக்குப் புரியும் வகையில் சுலபமாக இதை நாங்கள் சித்தரித்தோம்.

நீங்களும் இதே மனநிலையை உடையவர்கள் என்றால் மற்றவர்களுக்கும் இந்த வலைதள கட்டுரையை பகிருங்கள், நீங்களும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள் என்றால் நிச்சயம் இந்த பணிக்கு விண்ணப்பங்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment