நீங்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால் உங்களுக்கான உள்ளூர் அரசு வேலை வாய்ப்புக்கான சிறந்த நேரம் இதுது.
அதாவது சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் கணினி உதவியாளர் (Assistant With Computer Knowledge) பணிக்கான விண்ணப்பம் 20/09/2022 மாலை 5:45 மணிக்குள் வரவேற்கப்படுகிறது.
தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு மாதம் 12,000 தொகுப்பூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பணிக்கான தகுதிகள் பற்றிய தெளிவான விளக்கங்களை கிருஷ்ணகிரி மாவட்ட அரசின் அதிகாரப்பூர்வ (ந.கஎண்No:6685/2021/எக்ஸ்2) அறிவிப்பில் இருந்து சேகரித்து வழங்கியுள்ளோம்.
இந்த பகுதியில் நீங்கள் பார்க்க இருக்கும் தகவலானது விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யவும், அதை எவ்வாறு பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் மற்றும் இந்த வேலைக்கான தகுதி போன்ற பல விஷயங்களைப் பற்றி இந்த கட்டுரையில் விவாதிக்க உள்ளோம், மேலும் இதில் கூடுதல் தகவல்களும் உங்களுக்கு கிடைக்க உள்ளது.
தொடர்ந்து இதுபோன்ற பல அரசாங்க வேலைகளை நாங்கள் பதிவிட்டு வருகிறோம், அனைத்து மாவட்டத்திலுள்ள நபர்களும் அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க ஏதுவாக நாங்கள் வலைதளத்தை வடிவமைத்துள்ளோம்.
இந்த வேலையின் பெயர் என்ன?
இந்த வேலையானது கணினி உதவியாளர்களுக்கான வேலையாகும், இதை ஆங்கிலத்தில் (Assistant With Computer Knowledge) என்று கூறுவார்கள்.
இந்த வேலை கணினி மூலம் சில தகவல்களை பதிவேற்றம் செய்ய கூடியதாகவும், கணினி சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு உதவி புரியும் வேலையாகவும் இருக்கக்கூடும்.
எனவே நீங்கள் கணினி சார்ந்த வேலையில்தான் பணிபுரிய போகிறீர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.
இந்த வேலைக்கான தகுதி என்ன?
வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
மேலும் கணினியில் எம்எஸ் ஆஃபீஸில் அனுபவம் (MS office in computer) பெற்றவராகவும் இருத்தல் அவசியம்.
அதோடு இளநிலை தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொறுத்தவரை ஆதிதிராவிடர் அருந்ததியர், ஆதி திராவிடர் பழங்குடியினர் ஆகியவர்களுக்கு 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதை இருக்க வேண்டும்.
மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 21 வயது முதல் 30 வயதை தாண்டாமல் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாக 21 வயது முதல் 30 வயதை தாண்டாமல் இருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், அரசு கூறப்பட்ட தகுதி மட்டும் தேவைப்படும்.
வயது அடிப்படையானது 01/07/2022 அன்று அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ஊதியவிவரம்?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை கணினி இயக்குபவர் பணியிடத்துக்கு மாதம் 12,000 மட்டுமே தொகுப்பு ஊதியமாக வழங்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் பணியிடம் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அதோடு இந்தப் பணியானது அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவரே தகுதியான ஆட்களை உரிய முறையில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்வார் என்பதையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நம்மால் காண முடிகிறது.
தற்காலிக பணி என்று நீங்கள் அலட்சியமாக இல்லாமல் இந்த பணிக்கு விண்ணப்பித்து நீங்கள் தகுதியானவர் என்று முடிவு செய்யப்பட்டு ஒரு வருட காலம் பணிபுரியும்போது வருங்காலத்தில் நிரந்தர பணிக்கு உங்களை சிவாரிசு செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.
ஆகையால் கிடைக்கும் அனைத்து விஷயங்களையும் நாம் சரியான முறையில் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும், எனவே இந்த பணிக்கு தகுதியானவர் நீங்கள் என்றால் விண்ணப்பிக்க துவங்குங்கள்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | social welfare and women’s rights department |
துறை | (சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை) |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | Krishnagiri Recruitment 2022 |
திறக்கும் தேதி | 06/08/2022 |
கடைசி தேதி | 20/09/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, கிருஷ்ணகிரி |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
எவ்வாறு விண்ணப்பிக்க?
தேவையான விண்ணப்பப்படிவத்தை எங்கள் வலைதளத்தின் மூலமாகவோ அல்லது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் மூலமாகவோ பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பின்னர் விண்ணப்பத்துடன் முன்னுரிமை சான்றிதழ் நகல் அனைத்தையும் இணைக்க வேண்டும், அதோடு தங்களது கல்வித் சார்ந்த சான்றிதழ்கலையும் நகல்கள் எடுத்து சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் பரிசீலனை செய்யப்பட்டு விண்ணப்பதாரர்களின் தகவல் ஏதேனும் தவறாக இருந்தால், அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அனைத்து விஷயங்களும் சரியாக பூர்த்தி செய்த பிறகு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு), அறை எண் 18, தரைதளம் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு உங்களுடைய விண்ணப்பத்தை நீங்கள் அனுப்பவேண்டும்.
அனுப்பக்கூடிய இறுதி நாள் ஆனது 2/09/2022 அன்று மாலை 05:45 மணிக்கு விண்ணப்பம் அங்கு சென்று அடையுமாறு நீங்கள் அனுப்ப வேண்டும், இந்த விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.
Supper job