Advertisement: File No. CRG/2022/003102: தற்போது புதிதாக வந்த Research Fellow (JRF) வேலை அறிவிப்பின்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ளது.
மேலும் இந்த (JRF) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் தகுதியை பூர்த்தி செய்யும் நபர்கள் கட்டாயம் விண்ணப்பிக்க முடியும். ஆகையால், விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களையும் பார்த்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலிப் பணியிடத்தின் விவரம்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் ரிசர்ச் (Junior Research Fellow) பணியிடம் உள்ளது. இதற்கு ஒரு பணியிடம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.
Junior Research Fellow வேலைக்கான கல்வி தகுதி: வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை M.Sc/ M.Tech லைஃப் சயின்சஸ்/ பயோடெக்னாலஜி/ உயிர் வேதியியல்/ நுண்ணுயிரியல்/ தாவர அறிவியல்/ தாவரவியல்/ வேளாண்மை/ ஜீனோமிக் சயின்சஸ்/ பயோ இன்ஃபர்மேடிக்ஸ் ஆகியவற்றில் முடித்திருக்க வேண்டும். கூடுதலாக விண்ணப்பதாரர்கள் CSIR/UGC/DBT/GATE உடன் முதல் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேசிய இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
கவனிக்க: MADURAI KAMARAJ UNIVERSITY (JRF) சம்பளம் மற்றும் வயது வரம்பைப் பொறுத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ளும்போது இது சம்பந்தமான விவரங்கள் தெரிய வரலாம்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் புதிதாக வந்த வேலைவாய்ப்பு!
Junior Research Fellow (JRF) வேலைக்கான தேர்வு முறை: வேலைக்கான தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நுழைவுத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதைத் தொடர்ந்து நேர்காணலும் நடத்தப்படும். மேலும் நேர்காணலில் கலந்துகொள்வதற்கு TA அல்லது DA செலுத்தப்படாது என்பதை நினைவில் கொள்ளவும்.
விண்ணப்பிக்கும் முறை: MADURAI KAMARAJ UNIVERSITY வேலைக்கு நீங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 29/12/2023க்குள் அனுப்ப வேண்டும். நீங்கள் தபால் மூலம் அனுப்ப வேண்டிய விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்ப மறக்காதீர்கள். மேலும் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் போது உங்களுடைய ஒரிஜினல் ஆவணங்களையும் எடுத்துச் செல்லுங்கள். அறிவிப்பை பார்க்க இதனை கிளிக் செய்யலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Dr. T. Jebasingh, Principle Investigator, SERB Project, Department of Plant Sciences, School of Biological Sciences, Madurai Kamaraj University, Madurai-625021.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.