அரசு பாதுகாவலர்/டிரைவர் பணி! சம்பளம் 10,000/- | வாகனம் ஓட்ட தெரிந்தால் போதும்!

பத்திரிக்கை செய்தி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கட்டுப்பாட்டிற்கு பாதிக்கப்பட்ட மகளிருக்கு உதவும் DSWO-One Stop Centre ல் பாதுகாவலர்/டிரைவர் (Security / Driver) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று பத்திரிகை செய்தி வந்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் பாதிக்கப்பட்ட மகளிருக்கு உதவும் மையமான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (DSWO-One Stop Centre) முற்றிலும் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் ஒரு பாதுகாவலர்/டிரைவர்-கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரசு பாதுகாவலர்டிரைவர் பணி! சம்பளம் 10,000-  வாகனம் ஓட்ட தெரிந்தால் போதும்!
அரசு பாதுகாவலர்டிரைவர் பணி! சம்பளம் 10,000- வாகனம் ஓட்ட தெரிந்தால் போதும்!

குறிப்பு: இந்த பணியிடத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவிக்கான விண்ணப்ப படிவத்தை அதிகாரப்பூர்வ நாகப்பட்டினம் மாவட்ட வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவு தபால் மூலம் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், திட்ட செயலாக்கு பிரிவு 2, தரைத்தளம் கோட்ட அலுவலக வளாகம், புதிய கடற்கரை சாலை, காடம்பாடி நாகப்பட்டினம் 611001 என்ற முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 27/12/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கவனிக்க: இந்த பதவியானது பாதுகாவலர் மற்றும் டிரைவர் பதவி என்று நாம் மேலே பார்த்தோம். அதே சமயம் இந்த பதவிக்கான காலிப் பணியிடம் ஒன்று மட்டுமே உள்ளது. மாத ஊதிகமாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

தகுதி: தகுதியைப் பொறுத்தவரை ஈப்பு ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும், அதாவது இதற்கு முன்னர் நீங்கள் வாகனம் ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணி: பணி விவரத்தை பொறுத்த வரை OSC கட்டிடத்திற்கு பாதுகாவலர்/ஓட்டுநராக பணிபுரிய வேண்டும். 24 மணி நேரம் சேவை அளிக்கும் வகையில் சுழற்சி முறையில் பணி அமைத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க: கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்கலாம். அதற்கு முன் விண்ணப்பிப்பதற்கு விண்ணப்ப படிவத்தையும், அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு இந்த பகுதியை க்ளிக் செய்யுங்கள், விண்ணப்ப படிவத்திற்கு இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

கூடுதல் தமிழக அரசு வேலைகள்!
கூடுதல் அரசு பாதுகாவலர்/டிரைவர் பணி!

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment