நீலகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட அரசு வேலை வாய்ப்புகள் மூன்று நிலைகளில் உள்ளது. இதில் டிரைவர் வேலைவாய்ப்பு, இரவு காவலர் வேலை வாய்ப்பு, மற்றும் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு என பல வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கக்கூடிய வேலை இதில் அடங்குகின்றது. பெண்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீலகிரி மாவட்ட பெண்கள் இந்த வேலை வாய்ப்பு பற்றி விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க தயாராகுங்கள்.
குன்னூர் ஊராட்சி ஒன்றியம் நீலகிரி மாவட்டத்தில், ஒன்றிய தலைப்பு அலுவலக உதவியாளர் பதவிக்கான அறிவிக்க வெளியிடப்பட்டுள்ளது:
நீலகிரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து அரசு வேலை நாட்களில், மற்றும் அலுவலக நேரங்களில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர், சம்பளம் 15,700 முதல் 50,000 வரை நிலை ஒன்று என்ற சம்பள அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்யும் இதிர படிகளுடன் உங்களுக்கு வழங்கப்படும்.
வயதுவரம்பு: வயது அளவை பொருத்தவரை 18 வயது பூர்த்தியை அடைந்திருக்க வேண்டும். 01/07/2023 வரை உங்கள் வயது கணக்கிடப்படும். மேலும் அதிகபட்ச வயதாக 37 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க: குறிப்பாக ஆதரவற்ற விதவைக்கு அதிகபட்ச வயது 37. மொத்த பணியிடங்கள் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இன சுழற்சி விபரத்தை நீங்கள் அறிவிப்பில் பார்க்கலாம்.
கல்வி தகுதி: கல்வி பொருத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடத்தக்கது. இந்த வேலைக்கு ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது நமக்கு அறிவிப்பு மூலமாக தெரிய வருகிறது.
விண்ணப்ப படிவம்: இந்த வேலைக்கான விண்ணப்ப படிவத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து 20/12/2023 பிற்பகல் 05:45 மணிக்குள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்ய வேண்டும், பதிவிறக்க இதனை க்ளிக் செய்யுங்கள். அனுப்ப வேண்டிய முகவரி ஆனது குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளர்ச்சிப் பிரிவில் பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
குன்னூர் வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஒன்றிய தலைப்பு இரவு காவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு:
நீலகிரி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பின் கீழ் உள்ள இரவு காவலர் பணியிடத்தை பூர்த்தி செய்வதற்காக தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவி: பதவியின் பெயர் இரவு காவலர், சம்பளம் 15,700 முதல் 50 ஆயிரம் வரை, இதர படிகளுடன் நிலை ஒன்று என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
வயது: 01/07/2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது 37 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகளும் மற்றும் முன்னுரிமை பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி: கல்வி தகுதி பொறுத்த வரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் கூடுதல் தகுதி மிதிவண்டி ஓட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம்: அதிகர் பூர்வ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து 20/12/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் விண்ணப்பத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ செலுத்தலாம். நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும் என்றால் குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளர்ச்சி பிரிவு என்று முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை அனுப்புங்கள். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
நீலகிரி மாவட்ட வருவாய் துறையில் உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான பத்திரிகை செய்தி:
நீலகிரி மாவட்டம் வருவாய் அலகில் காலியாக உள்ள 3 ஓட்டுனர் (டிரைவர்) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்புக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள்: இந்த அரசு டிரைவர் பணியிடங்களுக்கு 3 காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. முன்னுரிமை பெற்றவர் போன்ற பல பகுப்புவாரியான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது, அதற்கு நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.
தேர்ச்சி: மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்வோர் தமிழை ஒரு பாடமாக கொண்டு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக ஆட்சியமை HMV / LMV Licence (லைசன்ஸ்) வைத்திருக்க வேண்டும். மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
வயது: விண்ணப்பத்தை பொருத்தவரை 01/07/2023 (அன்றைய) நிலையில் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். அதோடு அதே தேதியில் அதிகபட்சமாக 37 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க: இந்திய ராணுவ வீரராக இருந்தால், அதாவது முன்னாள் ராணுவ வீரராக இருந்தால் 48 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கூடுதல் வயது விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம்.
விண்ணப்பம்: விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் இணைத்து நீலகிரி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிவு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
கவனிக்க: தாமதமாக பெறப்படும் மனுக்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களிடம் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசினை செய்யப்பட்டு தகுதியானவர்களின் நேர்முக தேர்வுக்கு வருமாறு பின்னர் தனியே அழைப்பானை அனுப்பி வைக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தலைவர் அவர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகை செய்தியை படித்துப் பார்க்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.