செ.வெ.எண். 152, பத்திரிக்கை செய்தி நாள் – 08.03.2024:
நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பம் தொடக்கத் தேதி08/03/2024, முடிவுத் தேதி 22/03/2024 ஆகும்.
தேர்ந்தெடுக்கப் படும் பதவிகள்:
- முதுநிலை ஆலோசகர்
- சமூகநல தனியாளர்
பணியிடங்களின் எண்ணிக்கை:
- முதுநிலை ஆலோசகர்: 1
- சமூகநல தனியாளர்: 3
கல்வித்தகுதிகள்:
முதுநிலை ஆலோசகர்: சமூகபணி, ஆலோசனை உளவியல் அல்லது மனிதவள மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணிபுரிந்தவராகவும், பெண்களுக்கு எதிரானவன் முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பெண்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவும். உள்ளுரில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
சமூகநல தனியாளர்: சமூகபணி, ஆலோசனை உளவியல் சமூகநல அல்லது மனிதவள மேலாண்மையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த திட்டங்களில் பணி புரிந்தவராகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ஒருவருடம் ஆலோசனை வழங்குவதில் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். பெண்கள் மட்டும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கவும். உள்ளுரில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
ஊதியம்:
- முதுநிலை ஆலோசகர்: ரூ.20,000/-
- சமூகநல தனியாளர்: ரூ.15,000/-
எனவே, ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், உதகையில் 22 .3.2024-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு. அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
அணுக வேண்டிய அலுவலக முகவரி: மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகை 643006
நீலகிரி மாவட்டம்.
தொலைபேசி எண்: 0423 2443392.
Senior Counselor and Case Worker recruitment 2024 Pdf
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.