தற்போது தமிழ்நாடு முழுவதும் பல ஊராட்சிகளில் அரசு வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதில் இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் போன்ற பல பணியிடங்கள் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்த பணியிடத்திற்கு அதிகபட்ச சம்பளமாக 50,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது, குறைந்தபட்ச ஊதியமாக 15700 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இதற்கு எழுதப்படிக்க தெரிந்திருந்தாலே போதும் என்பதுதான் அனைவரையும் ஈர்க்கக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த விண்ணப்ப படிவத்தை சரியாக படித்து பார்த்து விண்ணப்பிக்க தயாராகுங்கள்.
விண்ணப்ப படிவம் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்றவை இந்த கட்டுரையில் உங்களுக்கு கீழே கிடைக்கும், வாருங்கள் கட்டுரையில் பயணிக்கலாம்.
வேலைக்கான பணியிடம்: இரவு காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடம் ஆனது ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சி ஒன்றியம் பொதுநீதியின் கீழ் ஊதிய பெரும் வேலையாகும். இதற்கு ஒரு அலுவலக உதவியாளருக்கு ஒரு காலி பணியிடம் உள்ளது. மேலும் இரவு காவலர் இடத்திற்கும் 1 பணியிடம் உள்ளது.
கவனிக்க: இது ஆர்.எஸ் மங்கலத்தில் சேர்ந்த நபர்கள் மட்டுமே இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதும் நிபந்தனையில் உள்ளது.
வேலைக்கான கல்வி தகுதி: வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது: வயது வரம்பு பொறுத்தவரை குறைந்தபட்ச வயது 18 அதிகபட்ச வயது 37. இதில் ஆதிதிராவிடர் மற்றும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் போன்றோருக்கு 18 முதல் 37. பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் போன்றவருக்கு 18 முதல் 34. பொதுப்பிரிவினருக்கு மட்டும் 18 முதல் 34 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கவனிக்க: இன சுழற்சி முன்னுரிமை விவரத்தை பொருத்தவரை ஆதிதிராவிடர் முன்னுரிமை பெற்றவர், கொரோனா தொற்றால் பெற்றோரை இருவரையும் இழந்தவர்களுக்கு முன்னுரிமை அழைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வேலை நிபந்தனை: வேலைக்கான நிபந்தனைகளை பொருத்தவரை விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, இருப்பிடம் சான்று, முன்னுரிமை சான்று போன்றவற்றிற்கான ஆதாரத்தை தபால் மூலம் இணைத்து அனுப்ப வேண்டும். அல்லது நேரில் சமர்ப்பிக்கும் போதும் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகுதி இல்லாதவர்களிடமிருந்து பெறப்படும் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிப்புள்ளது. விண்ணப்பதாரர்கள் அறிவிக்கப்பட்ட ஊராட்சியில் வசிப்பராக மட்டுமே இருக்க வேண்டும். அதாவது ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் ஊராட்சி சுத்துவட்டாரத்தில் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலும் நேர்காணலுக்கான விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் தனியே அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்க: இந்த வேலைக்கு நீங்கள் 12/12/2023 முதல் 29/12/2023 பிற்பகல் 5:45 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை நேரில் அல்லது தபால் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்க விலாசம்: ஆணையாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி ஒன்றியம், ஆர்.எஸ் மங்கலம் ராமநாதபுரம் மாவட்டம் 623525 ஆகும்.
படிவம்: அறிவிப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்யவும், படித்துப் பார்க்கவும் ஆசைப்பட்டால் இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப பதிவிறக்கம் செய்ய வேண்டும், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை அணுகுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.