TN TRB, தமிழ்நாடு கல்லூரிக் கல்வித் துறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசுக் கல்வியியல் கல்லூரிகளுக்கான 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இந்த ஆன்லைன் நடைமுறை அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.trb.tn.gov.in/-இல் 14.03.2024 முதல் 29.04.2024 05.00 PM வரை இருக்கும், தேர்வு தேதி: 04.08.2024 ஆகும்.
ஆகையால், விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதியைச் சரிபார்க்க TN TRB உதவிப் பேராசிரியர் 2024 அறிவிப்பை கவனமாகப் படிக்க வேண்டும்.
மொத்தம் 65 பதவிகளின் 4000 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, அவை ஒவ்வொன்றும் தனித்தனியாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பை நீங்கள் இங்கு பதிவிறக்கம் செய்து பொறுமையாக படித்துப் பார்க்க முடியும். இருந்தபோதும், உங்களுக்கு தேவையான விளக்கங்களை நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.
இந்த வேலைகளுக்கான வயது வரம்பு பொறுத்தவரை, விண்ணப்பதாரர்கள் 01.07.2024 தேதியின்படி 57 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது.
மாத சம்பளம் பொறுத்தவறை உதவி பேராசிரியர் பணிக்கு ரூ. 57,700 – 1,82,400 (நிலை 10) நடைமுறை பின்பற்றப்படும். வேலைக்கான தேர்வு முறை என்பது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடக்கும்.

TN TRB Official Website
TN TRB Official Notification PDF
TN TRB Online Application Form

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.