தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17000 முதல் ரூ.45000 வரை சம்பளம் வழங்கப்படும்.
கவனிக்க: இந்தப் பணிகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இது ஒப்பந்த அடிப்படையிலான வணிகமாகும். விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்படுவார்கள். அதன்பின், அவர்களின் செயல்திறன் அடிப்படையில், அவர்கள் நீட்டிக்கப்படுவார்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECRUITMENT EXERCISE FOR CHENNAI , MADURAI , TRICHY AND COIMBATORE காலியிடங்கள்:
துணை மேலாளர் பணிக்கு 8 பேர், டூட்டி ஆபிசர் பணிக்கு 8 பேர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பணிக்கு 43 பேர் என 59 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மாவட்ட வாரியான காலியிடங்கள்:
விமான நிலையங்களின் காலி பணியிடங்களை தனித்தனியாக பட்டியலிட்டுள்ளோம். இதில் கோவை, திருச்சி, மதுரை போன்ற இடங்களில் இருக்கும் பணியிடத்தை கீழே தெளிவாக பாருங்கள்:
கோவை விமான நிலையம்:
கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் | 12 |
ஹேண்டிமேன் | 20 |
மொத்தம் | 32 |
திருச்சி விமான நிலையம்:
சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் | 10 |
ஹேண்டிமேன் | 10 |
மொத்தம் | 20 |
மதுரை விமான நிலையம்:
கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் | 15 |
யூடிட்டிலிட்டி ஏஜென்ட் கம்ப் ராம்ப் டிரைவர் | 2 |
மொத்தம் | 37 |
வயது வரம்பு:
உதவி மேலாளர் பணிக்கு 55 வயது, பணி அதிகாரி பணிக்கு 50 வயது, வாடிக்கையாளர் சேவை நிர்வாகி, ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ், யுடிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஹேண்டிமேன் பணிக்கு 28 வயது. அரசு விதிகளின்படி SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு வயது தளர்வு உண்டு.
கல்வித் தகுதி:
உதவி மேலாளர் 16 ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் மற்றும் பயணிகள் மற்றும் தளவாடத் துறையில் 4 ஆண்டுகள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆன் டியூட்டி அதிகாரி முதுகலைப் பட்டம் மற்றும் விமான நிலையத்தில் 12 வருட அனுபவம்.
கஸ்டமர் எக்ஸிகியூட்டிவ் மற்றும் ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிகியூட்டிவ் பதவிகளுக்கு 10வது, 12வது தேர்ச்சியுடன் ஏர்லைன், ஜிஹெச்ஏ, கார்கோ, ஏர்லைட் டிக்கெட்டிங் துறை அல்லது ஏர்லைன் டிப்ளமோவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
யுடிலிட்டி ஏஜென்ட் மற்றும் ராம்ப் டிரைவருக்கு, 10வது தேர்ச்சி மற்றும் HMV உரிமம். கைவினைஞர் வேலைக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தேவை மற்றும் ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ் ஆகியவற்றைப் பேசவும் புரிந்துகொள்ளவும் படிக்க வேண்டும்.
மாத சம்பளம்:
- Duty Manager – Passenger பணிக்கு ரூ.45 ஆயிரம் வழங்கப்படும்.
- Duty Officer – Passenge அதிகாரிக்கு ரூ.32,200.
- CustomerServiceExecutiveக்கு ரூ.23,640 முதல் ரூ.25,980.
- JuniorCustomerServiceExecutiveக்கு ரூ.20,130 முதல் ரூ.23,640.
- Utility Agent Cum Ramp Driverக்கு ரூ.20,130.
- Handyman பணியின் மாதச் சம்பளம் ரூ.17,850.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aiasl.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
நேர்காணல் நடைபெறும் இடம்:
ஓவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனி தேதிகளில் நடக்கும்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த நேர்காணல் நடைபெறும். மனிதவள மேம்பாட்டுத் துறை அலுவலகம், AI யூனிட்டி வளாகம், பல்லாவரம் கண்டோன்மென்ட், சென்னை – 600 043 என்ற முகவரியில் நேர்காணல் நடைபெறும்.
நேர்க்காணல் தேதி:
- துணை மேலாளர், டூட்டி ஆபிசர் பணிக்கான நேர்க்காணல் டிசம்பர் 26ம் தேதி.
- கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ்/ஜூனியர் கஸ்டமர் சர்வீஸ் எக்ஸிக்கியூட்டிவ் பிரிவில் சென்னை விமான நிலைய பணிக்கு டிசம்பர் 27 ம் தேதி.
- மதுரை, திருச்சி, கோவை விமான நிலைய பணிக்கு டிசம்பர் 29ம் தேதி.
- யூடிட்டிலிட்டி ஏஜென்ட் கம் ராம்ப் டிரைவர், ஹேண்டிமேன் பணிக்கு டிசம்பர் 30ம் தேதி நேர்க்காணல்.
aiasl.in/resources/Advertisement – CHENNAI, MADURAI, TRICHY AND COIMBATORE – DEC 2023.pdf
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.