தமிழக வன அனுபவ கழகத்தில் 30,000 முதல் 1.5 லட்சம் வரை சம்பளம் தரும் வேலை! தேர்வு இல்லை!!

Follow Us
Sharing Is Caring:

தமிழ்நாடு பண அனுபவ கழகத்தில் Tamil Nadu Wilderness Experiences Corporation (TNWEC) இருந்து பல வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த மாதத்தில் பல வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் 30 ஆயிரம் முதல் 1.5 லட்சம் வரை சம்பளம் அளிக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் அடங்குகின்றன. இந்த வேலை வாய்ப்புகளுக்கான விண்ணப்பிக்கும் வழிமுறை அனைத்தும் உங்களுக்கு இந்த வலைதள கட்டுரையில் கிடைக்கும்.

அதில் Chief Operating Officer, Company Secretary, Finance Officer, Administrative Officer, Associate (Technical), மற்றும் Associate (Finance) போன்ற பல வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வேலைவாய்ப்புகள் பற்றிய தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையை பார்ப்பதோடு, ஒவ்வொரு பணிக்கும் விண்ணப்பிக்கும் உதவியும் நேரடி அதிகாரப்பூர் வலைதளத்துக்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடிய லிங்கையும் நீங்கள் எங்கு பெற முடியும். ஆகையால் வாருங்கள் தொடர்ந்து கட்டுரையில் பயணிக்கலாம்.

TNWEC Recruitment 2023
TNWEC Recruitment 2023

Chief Operating Officer

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

வேலை: முதலில் முதன்மை இயக்க அலுவலர் எனும் Chief Operating Officer பணிக்கு நிறுவனத்தில் உள்ள ஒரு முக்கிய மூத்த நிர்வாகி ஆகும், CEO சியோக்கு அறிக்கை செய்வது மற்றும் ஒரு வணிகத்தின் தினசரி செயல்பாடுகளை மேம்படுவதற்கான பொறுப்பு வழங்கப்படும்.

கல்வி: இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை அங்கீகாரம் பெற்ற மற்றும் புகழ்பெற்ற நிறுவனம் மூலம், அல்லது பல்கலை கழகத்தின் மூலம் நீங்கள் வணிக நிர்வாகம் / சுற்றுலா ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம்: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 12 ஆண்டுகள் அரசு சேவையில் அல்லது கார்ப்பரேட் துறை / ஆலோசனை நிறுவனங்களில் உயர் பதவியில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கவனிக்க: கூடுதல் விளக்கங்களுக்கு நீங்கள் tnwec அறிவிப்பை பார்க்கலாம்.

முதன்மை இயக்க அலுவலர் எனும்Chief Operating Officer பணி
முதன்மை இயக்க அலுவலர் எனும்Chief Operating Officer பணி

பணியிடம்: காலி பணியிடத்தை பொறுத்தவரை ஒன்று மட்டுமே உள்ளது. இதற்கு ஊதியம் 1.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பு எண்ணாக (TNWEC/COO/2023) அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதற்கான கடைசி தேதி 25/12/2023. ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

Company Secretary

வேலை: நிறுவனத்தின் செயலாளர் எனும் இந்த Company Secretary வேலையானது நிறுவன செயலாளரின் முதன்மைப் பணியானது ஆகும். அதாவது நிறுவனம் தொடர்புடைய சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்வது மற்றும் குழு உறுப்பினர்களுக்கு அவர்களின் சட்டப் பொறுப்புகள் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.

கல்வி தகுதி: நீங்க; சிஎஸ் (CS) (இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினர்) தகுதி வேண்டும்.

அனுபவம்: அரசு சேவை / ஆலோசனை நிறுவனங்களில் நிறுவன செயலர் மற்றும் சட்டப் பணிகளில் 5 வருட அனுபவம். கார்ப்பரேட் சட்டங்கள், பத்திரங்கள் சட்டங்கள் & மூலதனச் சந்தை மற்றும் கார்ப்பரேட் ஆளுகை ஆகியவற்றில் அறிந்தவராக இருக்க வேண்டும்.

நிறுவனத்தின் செயலாளர் எனும் இந்த Company Secretary வேலை
நிறுவனத்தின் செயலாளர் எனும் இந்த Company Secretary வேலை

பணியிடம்: காலி பணியிடத்தை பொறுத்தவரை 1 மட்டுமே உள்ளது. இதற்கு ஊதியம் 75,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பு எண்ணாக (TNWEC/CS/2023) அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதற்கான கடைசி தேதி 25/12/2023. ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

Finance Officer

வேலை: ஒரு நிதி அதிகாரி நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனைகளை மேற்பார்வையிடுவதற்கும் மதிப்பாய்வு செய்வதற்கும் பொறுப்பாக உள்ளார்.

கல்வி தகுதி: CA / CWA தகுதி வேண்டும்.

அனுபவம்: முன்னணி கார்ப்பரேட்கள் / நிறுவனங்களில் நிதிச் சேவைகளை நிர்வகிப்பதில் 10 ஆண்டுகள் அனுபவம் வேண்டும். மற்றும் வரி விதிமுறைகள் மற்றும் கணக்கியல் கொள்கைகள் பற்றிய உறுதியான அறிவு, நிதிக் கருவிகள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்தும் திறன் மற்றும் வலுவான பகுப்பாய்வு திறன் ஆகியவை முக்கியம்.

நிதி அதிகாரி எனும் Finance Officer வேலை
நிதி அதிகாரி எனும் Finance Officer வேலை

பணியிடம்: காலி பணியிடத்தை பொறுத்தவரை 1 மட்டுமே உள்ளது. இதற்கு சம்பளமாக 75,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பு எண்ணாக (TNWEC/FO/2023) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு தேதி 07/12/2023, விண்ணப்பதற்கான கடைசி தேதி 25/12/2023. ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

Administrative Officer

வேலை: ஒரு நிர்வாக அதிகாரி என்பவர் அனைத்து ஊழியர்களுக்கும் தொடர்பு கொள்ளும் முக்கியமான புள்ளியாக செயல்படுவார், நிர்வாக ஆதரவை வழங்குவார் மற்றும் அவர்களின் கேள்விகளை நிர்வகிப்பார்.

உதாரணமாக, அலுவலக பொருட்கள் இருப்பு மற்றும் ஆர்டர்களை நிர்வகித்தல், வழக்கமான நிர்வாக அறிக்கைகள் தயாரித்தல், நிறுவனத்தின் தரவுத்தளங்களின் நிர்வாகம், மற்றும் அட்டவணை சந்திப்புகளை பராமரித்தல், தேவைக்கேற்ப சந்திப்பு அறைகளை பதிவு செய்தல், கடிதங்களை விநியோகித்தல் (கடிதங்கள், மின்னஞ்சல்கள் போன்றவை), அறிக்கைகளைத் தயாரித்தல் மேலும் பல.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் நிர்வாகத்தில் எம்பிஏ / பிஜி டிப்ளமோ தகுதி வேண்டும்.

அனுபவம்: அரசு/முன்னணி கார்ப்பரேட்/நிறுவனங்களில் நிர்வாக அதிகாரியாக அல்லது நிர்வாகப் பணிகளைக் கையாளும் அதேபோன்ற பணிகளில் 5 வருட அனுபவம். மற்றும் அலுவலக நடைமுறைகள் மற்றும் கணினி பயன்பாடுகளில் தேர்ச்சி, பல்பணி திறன் மற்றும் சிறந்த நிறுவன மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவை முன் தேவை.

நிர்வாக அதிகாரி எனும் Administrative Officer வேலை
நிர்வாக அதிகாரி எனும் Administrative Officer வேலை

பணியிடம்: காலி பணியிடத்தை பொறுத்தவரை 1 மட்டுமே உள்ளது. இதற்கு சம்பளமாக 50,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பு எண்ணாக (TNWEC/AO/2023) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு தேதி 07/12/2023, விண்ணப்பதற்கான கடைசி தேதி 25/12/2023. ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

Associate (Technical)

வேலை: அசோசியேட் (தொழில்நுட்பம்) எனும் Associate (Technical) என்பது பொதுவாக மூத்த நிர்வாகிகளுக்கு உதவுவது. அதாவது CEO, COO, AO போன்ற பதிவில் உள்ளவர்களுக்கு நிர்வாகப் பணிகளைக் கையாள்வதில் உதவுவது.

உதாரணமாக, வணிக செயல்முறைகளை ஒழுங்கமைத்தல், நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல், இணைய அடிப்படையிலான முன்பதிவு, இணையதள உள்ளடக்க மேம்பாடு, பயணம் மற்றும் ஓய்வுத் துறையில் சந்தைப் போக்குகளின் பகுப்பாய்வு, பதவி உயர்வு மற்றும் சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச வருமானம் மற்றும் சேவையை வழங்குதல், வணிக ஆலோசனை சேவைகளை வழங்குதல் போன்றவை அடங்கும்.

கல்வி தகுதி: சுற்றுலா மற்றும் விருந்தோம்பல்/சுற்றுச்சூழல் சுற்றுலா/ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் அறிவியலில் பட்டம் அல்லது டிப்ளமோ போன்ற தகுதிகள் தேவைப்படும்.

ஆங்கிலத்தில்: Diploma in Tourism & Hospitality / Ecotourism / Hotel Management and Catering Science.

வயது வரம்பு: அதிகபட்சம் 40 ஆண்டுகள்.

அனுபவம்: Hotel Management / வணிக திட்டங்கள் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தின் செயல்பாடுகளை திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துவதில் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

அசோசியேட் (தொழில்நுட்பம்) எனும் Associate (Technical) வேலை
அசோசியேட் (தொழில்நுட்பம்) எனும் Associate (Technical) வேலை

பணியிடம்: காலி பணியிடத்தை பொறுத்தவரை 1 மட்டுமே உள்ளது. இதற்கு மாத சம்பளமாக 30,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பு எண்ணாக (TNWEC/AST/2023) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு தேதி 07/12/2023, விண்ணப்பதற்கான கடைசி தேதி 25/12/2023. ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

Associate (Finance)

வேலை: அசோசியேட் (நிதி) எனும் Associate (Finance) பதவியானது பொதுவாக பல்வேறு நிதி மற்றும் கணக்கியல் பணிகளைச் செய்வதில் நிறுவனத்தின் நிதி அதிகாரிக்கு சேவையளித்தல். அதாவது (நிதி அதிகாரியுடன்) மூத்த அல்லது

முக்கிய பொறுப்புகள்: பட்ஜெட் தயாரித்தல், தணிக்கைக்கான உதவி, நிதி அறிக்கைகளின் தொகுப்பு, இணக்க உதவி போன்றவை அடங்கும்.

கல்வி தகுதி: நிதி / பிபிஏ பட்டம்.

வயது வரம்பு: அதிகபட்சம் 40 ஆண்டுகள்.

அனுபவம்: சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள்.

அசோசியேட் (நிதி) எனும் Associate (Finance) பதவி
அசோசியேட் (நிதி) எனும் Associate (Finance) பதவி

பணியிடம்: காலி பணியிடத்தை பொறுத்தவரை 1 மட்டுமே உள்ளது. இதற்கு மாத சம்பளமாக 30,000/-நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பு எண்ணாக (TNWEC/ASF/2023) அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு தேதி 07/12/2023, விண்ணப்பதற்கான கடைசி தேதி 25/12/2023. ஆன்லைனில் விண்ணப்பிக்க உடனே இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

கூடுதல் தமிழக அரசு வேலைகள்!
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment