Tenkasi Jobs in 2024: தென்காசி வேலைகள் 2024!

பத்திரிக்கைச் செய்தி: சமூகப் பாதுகாப்புத்துறை குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனமத்திற்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு.

Tenkasi Jobs in 2024 Show In English:

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) சட்டத்தின் விதிமுறைகளின் படி அமைக்கப்பட்டுள்ள குழந்தை நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளை கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தை நலக்குழுவிற் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர் மற்றும் இப்பதவி அரசு பணி அல்ல.

கல்வி: விண்ணப்பதாரர்கள் குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மற்றும் குழந்தைகள் தொடர்பான உடல்நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூகப்பணி அல்லது சமூகவியல் அல்லது மனித ஆரோக்கியம் அல்லது கல்வி அல்லது மனித மேம்பாடு அல்லது மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் நியமனம் செய்யப்படும்போது 35 வயதுக்கு குறையாதவராகவும் 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒரு நபர் குழந்தை நலக்குழு தலைவர் அல்லது உறுப்பினராக நியமனம் செய்த தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் இதற்கான விண்ணப்பப்படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளியீடு நாளிலிருந்து 15 நாட்கள் வரை) கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

Tenkasi Jobs in 2024
Tenkasi Jobs In 2024 Image (tenkasi.nic.in)
Start Date17/02/2024
End Date02/03/2024
DescriptionApplications are invited for Appointment of Committee Child Welfare Members

முகவரி: இயக்குநர், சமூகப் பாதுகாப்புத்துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, G&GOT 6060T – 600 010.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டும்.

தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Tenkasi Jobs in 2024 Notification Pdf

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்புத்துறை, தென்காசி.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment