திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு வேலை, 21.06.2024 முதல் 06.07.2024 வரை மட்டுமே!

  • பத்திரிக்கை செய்தி: திருச்சிராப்பள்ளி மாவட்டம்.
  • தகவல்: மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப.
  • வேலை விவரம்: உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர்.
  • பணி: ஒப்பந்த அடிப்படையில்.
  • கடைசி தேதி: 21.06.2024 முதல் 06.07.2024 அன்று மாலை 5.30 வரைக்கும்.
  • விண்ணப்ப முறை: தபால் அல்லது நேரில்.
JobsTn.In

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) பணியாளர் தேர்விற்கான தகுதியான விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப்குமார், இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் (மிஷன் வத்சல்யா) கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற கீழ்கண்ட பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பணியிடம்: (1 பணியிடம்)
  • தொகுப்பூதியம்: ரூ.11,916/- (ஒரு மாதத்திற்கு)
  • கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதல் தகுதி 1: தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தேர்வில் மேல்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதல் தகுதி 2: கணினி இயக்குவதில் தேர்ச்சி மற்றும் ஆற்றல் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
  • வயது வரம்பு: 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது.

மேற்கண்ட திருச்சிராப்பள்ளி மாவட்ட இளைஞர் நீதிக்குழுமத்தின் பதவிக்கான விண்ணப்படிவத்தினை hhttps://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ இணையதளத்தில் இருத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் 21.06.2024 முதல் 06.07.2024 அன்று மாலை 5.30 மணிக்குள் கீழ்காணும் முகவரிக்கு வந்து சேரும் வகையில் (நேரிலோ/தபால் மூலமாகவோ) அனுப்பப்பட வேண்டும்.

கவனிக்க: குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, N.E.1, முதல் தளம்,
மெக்டொனால்டு ரோடு,
கலையரங்கம் வளாகம்,
திருச்சிராப்பள்ளி – 620 001.
தொலைபேசி எண்: 0431-2413055.

  1. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்
  2. சுயசான்றொப்பமிட்ட கல்விச்சான்றுகளின் நகல்.
  3. சுயசான்றொப்பமிட்ட பணி அனுபவ சான்றுகளின் நகல்.

குறிப்பாக: மேலும் விபரங்களுக்கு 0431-2413055 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Trichy – District Child Protection Unit – Juvenile Justice Board Data Entry Operator – Notification & Application Release View (539 KB)

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment