பொருள் : பார்வை: குழந்தைகள் நலன் திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – மாவட்ட குழந்தைகள் நல குழுவில் உள்ள 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் காலி பணியிடம் நிரப்புதல் – பத்திரிகை செய்தி வெளியிடுதல் – தொடர்பாக. இயக்குனர், சமூக பாதுகாப்புத்துறை அவர்களின் கடித எண்: 1/79669/2024, நாள்: 15.02.2024.
பார்வையில் குறிப்பிட்டுள்ள சமூகப் பாதுகாப்புத்துறை இயக்குநர் அவர்களின் கடிதத்தின் படி, இளைஞர் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) 2015 சட்டம் 27 (1),(2)-ன் படி குழந்தை நலக் குழுவில் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்ய மேற்குறிப்பிட்டுள்ள சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக உருவாக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள்( அவர்களில் குறைந்தபட்சம் ஒருவர் பெண் இருத்தல் வேண்டும்) ஆகிய காலிப்பணியிடத்தினை மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருப்பத்தூர் மாவட்ட குழந்தை நலக் குழுவில் 1 தலைவர் மற்றும் 4 உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை தேர்வு செய்து நிரப்பும் பொருட்டு விண்ணபங்களை வரவேற்க ஏதுவாக தமிழ் மற்றும் ஆங்கிலம் தினசரி நாளிதழ்களில் செய்தி வெளியிடவும், இம்மாவட்ட வலைத்தளத்தில் (NIC) விண்ணப்பதை பதிவேற்றம் செய்யவும் அனுமதி மற்றும் ஒப்புதல் வேண்டி கோப்பு பணிந்து சமர்பித்துக்கொள்கிறேன்.
Recruitment of Child Welfare Committee Tirupathur District Pdf
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.