By Jobstn.In
- மாவட்டம்: விருதுநகர் மாவட்டம்.
- வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், விருதுநகர்.
- அறிவிப்பு: விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் தரவு ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பனியின் பெயர்: தகவல் பகுப்பாளர் (Data Analyst).
- தொகுப்பூதியம்: ஒரு மாதத்திற்கு ரூ.18,536/-.
- பணியிடம்: ணியிடம்முற்றிலும் தற்காலிக பணியிடம்.
- கடைசித்தேதி: 28.06.2024 மாலை 5.30 மணிக்குள்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு விருதுநகர் தற்காலிக தரவு ஆய்வாளர் பதவிக்கான விவரங்கள் |
விருதுநகர் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் இதற்க்கு தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள காலிப்பணியிடம் ஆனது தகவல் பகுப்பாளர் (Data Analyst) ஆகும்.
கல்வித்தகுதி அனுபவம் மற்றும் வயது: |
இந்த பணியிடம் 01 மட்டுமே கலியாகஉள்ளது, மற்றும் தொகுப்பூதியம் ஒரு மாதத்திற்கு ரூ.18,536/- வழங்கப்படும்.
அடிப்படை கல்வித்தகுதி: புள்ளியியல்/ கணிதம்/ பொருளியல்/ கணினி அறிவியல் (BCA) பட்டப்படிப்பு சான்று பெற்று இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்: கணினி சார்ந்த பணிகளில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு: 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
மேற்குரிய விருதுநகர் Data Analyst பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
மேற்கண்ட பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (Pass port Size) புகைப்படத்துடன், 28.06.2024 மாலை 5.30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
கவனிக்க: மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும்.
விண்ணப்ப முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5 – வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர் – 626 003. தொலை பேசி எண். 04562-293946.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.