விருதுநகர் மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி அலகுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியத்தின் அறிவிக்கை; அலுவலக உதவியாளர் பணியினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அறிவிப்பு: விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணி இடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடம் ஒன்று மட்டுமே உள்ளது. இன சுழற்சி விபரத்தை பொறுத்தவரை ஆதிதிராவிடர் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் (பெண்) ஆதரவற்ற விதவை போன்றவருக்கு ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊதியத்தை பொருத்தவரை 15,700 முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி பொறுத்தவரை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், மற்றும் கூடுதல் தகுதியாக மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01/07/2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது 32 ஆகவும், மற்றும் இதர பிரிவுகளுக்கான வயது 34, 37 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவற்றைப் பற்றிய தெளிவான விளக்கங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.
எப்படி விண்ணப்பிப்பது: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நீங்கள் 15/12/2023 முதல் 04/01/2024 பிற்பகல் 5:45 மணிக்குள் ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் விருதுநகர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். எவ்வாறு அனுப்புவதற்கு உங்களுக்கு விண்ணப்ப படிவம் தேவை, அந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.