சமீப காலமாகவே தமிழ்நாடு அரசு மூலம் பல ஊராட்சி ஒன்றியங்களில், பல மாவட்டங்களில் அலுவலக உதவியாளர் வேலை மற்றும் இரவு காவலர் வேலை போன்ற பணியிடங்கள் நிறைய வந்துள்ளது.
அந்தவகையில் தற்போது புதிதாக வெளிவந்த இந்த அலுவலக உதவியாளர் வேலை பற்றிய தெளிவான விளக்கம் தான் இந்த வலைதள கட்டுரை.
இந்த வேலையை பொறுத்த வரை, விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் உள்ள விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஒரு (1) அலுவலக உதவியாளர் பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் அடிப்படையில் வேலைவாய்ப்பு பற்றிய தெளிவான விளக்கங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் வாருங்கள்.
வேலைக்கான கல்வித்தகுதி: வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை ஆரம்பத்தில் நாம் பேசினோம். எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆனால் கூடுதல் தகுதியாக மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்று நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதவிக்கான சம்பளம் எவ்வளவு: அலுவலக உதவியாளருக்கான பணியிடத்தின் சம்பளத்தை பொருத்தவரை 15,700 முதல் 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயதுவரம்பு என்ன: வேலைக்கான வயது பொருத்தவரை விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதிகபட்ச வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது. 18 வயது கணக்கிடப்படும் தேதியானது 1/7/2023 அன்றிலிருந்து 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கான வயதுவரம்பு மற்றும் அதற்கான சலுகைகள் பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்க முடியும்.
கவனிக்க: அடுத்தபடியாக விருதுநகர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பத்தை எவ்வாறு அனுப்புவது: விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15/12/2023 முதல் 04/01/2024க்குள் அலுவலகத்தை சென்றடையுமாறு நீங்கள் அனுப்ப வேண்டும். மேலும் நீங்கள் அனுப்பக்கூடிய முகவரி ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய விருதுநகர் என்ற முகவரிக்கு அனுப்பப்படும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய (அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்துப் பார்க்க விரும்பினால்) இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.