அரியலூர் மாவட்டத்தில் இந்த மாதம் வெளிவந்த அரசு வேலைவாய்ப்பு!

பத்திரிக்கை செய்தி: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தேசிய நல வாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நலமாக அரியலூர் மாவட்டம் மூலம் வெளிவந்த District Quality Consultant வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் இது.

அதாவது தேசிய நல வாழ்வு குழுமம் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட தர நிர்வாக ஆலோசகர் எனும் காலிப்பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆம் இந்த விண்ணப்பத்திற்கான கல்வித் தகுதி, விண்ணப்ப முறை, விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி போன்றவற்றை தொகுத்து வழங்க தான் இந்த கட்டுரை. இதன் மூலம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உதவி கிடைக்கும் என்ற நோக்கத்தோடு உங்களை வரவேற்கிறோம் வாருங்கள்.

சுருக்கமாக காண:

[dflip id=”10448″ ][/dflip]


District Quality Consultant in the National Welfare Group Scheme

அறிவிப்புariyalur.nic.in
பதவிதர ஆலோசகர் பணி
சம்பளம்40,000/-
காலியிடம்01
பணியிடம்தேசிய நலக் குழுத் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில்
தகுதிகள்Degree
விண்ணப்பிக்க கடைசி தேதி10/11/2023

District Quality Consultant வேலைக்கான கல்வி தகுதி என்ன?

அரியலூர் மாவட்டத்தில் (31/10/2023) வெளியான இந்த District Quality Consultant எனும் மாவட்ட சுகாதார நிலைய ஆலோசகர் பணியிடத்திற்கான கல்வி தகுதியை பொறுத்தவரையில் விண்ணப்பத்துடன் டிகிரி சர்டிபிகேட் மற்றும் மதிப்பெண் சான்று.

அதாவது பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புக்கான மதிப்பெண் சான்று, கம்யூனிட்டி சர்டிபிகேட், இருப்பிட சான்று, அனுபவ சான்று போன்றவற்றை இணைக்க வேண்டும்.

மேலும் விரிவான விளக்கத்தை ஆங்கிலத்தில் சில வரிகளில் கொடுத்துள்ளோம், காரணம் அதை தமிழ் மொழி பெயர்த்தால் சரியாக புரியாது. ஒரு .வேலை புரியவில்லை என்றால் எங்களிடம் கருதப்பட்டியில் கூறுங்கள், அதற்கான விளக்கத்தையும் கொடுப்போம்.

Dental / AUYSH/ Nursing/ Social Science/ Life Science Graduates with Master’s Degree in Hospital Administration / Public Health / Health Management (Full-time or equivalent) With 2 years experience in Health administration. Desirable training/experience on NABH/ ISO9001:2008/ Six Sigma / Lean/ Kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.

Quality Consultant வேலைக்கான மாத ஊதியம்:

அரியலூர் மாவட்ட அரசு Quality Consultant வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை 40 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது, மேலும் இது ஒப்பந்த அடிப்படையில் ஆன வேலை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு:

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்டத் தர ஆலோசகர் வேலைக்கான வயது வரம்பு பொருத்தவரை, 45 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுடைய வயது 01/07/2023 அன்றிலிருந்து 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை குறிப்பிடத்தக்கது.

அடியலூரில் 31/10/2023 முதல் 10/11/2023 வரை விண்ணப்பிக்க கூடிய District Quality Consultant வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த District Quality Consultant வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். உங்களுடைய சான்று அனைத்தயும் இணைத்து தபால் மூலம் அனுப்பிவையுங்கள். விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செயற் செயலாளர், மாவட்ட நலமாக சங்கம் மற்றும் துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், அரியலூர் மாவட்டம் என்ற முகவரிக்கு உங்கள் விண்ணப்பத்தை தபால் மூலம் வரும் 10/11/2023 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்புங்கள்.

குறிப்பு: தபால் மூலம் அனுப்ப முடியாதவர்கள் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம், நேரிலும் உங்கள் விண்ணப்பங்கள் அலுவலக நேரங்களில் ஏற்றுக் கொள்ளப்படும்.

வேலைக்கான நிபந்தனைகள்: இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் கிடையாது.

Press Release: Details on the District Quality Consultant role under National Health Commission in Ariyalur district, including qualifications, application procedure, and salary. Apply before 10/11/2023
Ariyalur District Quality Consultant: Employment Notification & Application Details

இந்த கட்டுரையில் பார்த்த தேசிய நலக் குழுத் திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்டத் தர ஆலோசகர் பணியிடங்களுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக நியமனம் செய்ய வேண்டி இருப்பதால் ஒப்பந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட 10/11/2023 மலை 5:00 மணிக்குள் விண்ணப்பியுங்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment