முன்னணி நிறுவனமான NLCயில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், மைனிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் 295 கிராஜுவேட் எக்ஸிகியூட்டிவ் டிரெய்னிகளை (GET) தேர்ந்தெடுப்பதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே, ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மே 21 மாலை 5 மணிக்கு, அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலியிடங்கள் விவரம்: அனல் மின் நிலையங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் கீழ் 140 பட்டதாரி மேலாண்மை பயிற்சி காலியிடங்கள் மற்றும் என்எல்சியில் சுரங்கங்கள் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளின் கீழ் 155 பட்டதாரி மேலாண்மை பயிற்சி காலியிடங்கள் உள்ளன.
அடிப்படை தகுதி: GATE 2023 முடித்திருக்க வேண்டும், GATE மதிப்பெண் 2023 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் (பகுதி நேரம்/முழு நேரம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முக்கியத் தேதிகள்: விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.12.2023 மாலை 5 மணிக்குள்; விண்ணப்பக் கட்டணத்தை அன்றைய தினம் இரவு 11:45 மணிக்குள் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 2023 ஆம் ஆண்டிற்கான கேட் மதிப்பெண் மற்றும் நேர்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடக்கும்.
கவனிக்க: ஒவ்வொரு காலியிடத்திற்கும் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 2023 கேட் மதிப்பெண்களுக்கு 80% வெயிட்டேஜ் மற்றும் நேர்காணலுக்கு 20% வெயிட்டேஜ் வழங்கப்படுகிறது.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது வரம்பு 01/11/2023 தேதியின்படி 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: விண்ணப்பதாரர்கள் ஒரு வருடம் பயிற்சியாளராக இருப்பார்கள். அப்போது மாத சம்பளம் ரூ.50,000 முதல் ரூ. 1,60,000 வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது? முக்கிய தேதிகள்: இதற்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்படுகின்றன. www.nlcindia.in என்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ஆட்சேர்ப்பு அறிவிப்பை இங்கே பதிவிறக்கம் செய்யலாம்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.