செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு புதிதான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்பு இருவிதமாக நம்மால் பார்க்க முடிகிறது.
- விற்பனையாளர்
- கட்டுநர்
இந்த வேலைவாய்ப்பு விற்பனையாளர் மற்றும் கட்டுநர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இந்த வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி தேதியாக 14/11/2022 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பை பெறுவதற்கான கல்வி தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பல விஷயங்களை தெளிவாக இந்த வலைதள கட்டுரை மூலம் நீங்கள் பார்க்க உள்ளீர்கள்.
ஆர்வம் உள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம், இந்த வேலைக்கு அதிக பட்ச ஊதியமாக 29,000/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பு. இந்த வேலை சம்பந்தமான முழு தகவலை தெளிவாக காணலாம் வாருங்கள்.
அதற்கு முன்னர் இது போன்ற பல விஷயங்கள் பகிர்ந்து வருகிறோம், தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு சம்பந்தமான கூடுதல் விளக்கங்களை உரிய தேதிக்கு முன்பாகவே அவர்களுக்கு நாங்கள் கொண்டு சேர்க்கிறோம், இந்த முயற்சியில் நீங்களும் கைகோர்க்க நினைத்தால் இதை பகிருங்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும், தொடர்ந்து கவனிக்கலாம் வாருங்கள்.
பணிக்கான வயது வரம்பு?
இந்த நியாய விலைக் கடை பணிக்கான வயது வரம்பை பொறுத்தவரை நீங்கள் 01/07/2022 அன்று அடிப்படையில் 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
மேலும் ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் மற்றும் இவ்வகுப்பில் சேர்ந்த மற்றும் முன்னாள் ராணுவத்தினர் போன்றவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு போன்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் விளக்கங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் தெளிவாக காணலாம், அது சம்பந்தமான விரிவான விளக்கங்கள் உங்களுக்கு வலைதள கட்டுரையில் கிடைக்கும்.
தகுதி தேர்வு?
தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைபாடுகள் தெளிவுபடுத்தும் வகையில், பதவிக்குரிய பொறுப்பை முழு திறனுடன் நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்காது என்பதற்கான சான்றிதழை மருத்துவரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது நேர்முகத் தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு வேலை வழங்குவதற்கான வாய்ப்பு இதில் உள்ளது.
விற்பனையாளர் பதவிக்கு: மேல்நிலை வகுப்பு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
கட்டுநர் பணிக்கு: பள்ளி இறுதி வகுப்பு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு பதவிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TN Ration Shop |
துறை | கூட்டுறவு துறை |
இணையதளம் | Drbcgl.in |
கடைசி தேதி | 14/11/2022 |
வேலை இடம் | தமிழ்நாடு, செங்கல்பட்டு |
தேர்வு முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
முகவரி | செங்கல்பட்டு மாவட்டம் தலைவர் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர், மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், எண்: 1 ராஜாஜி சாலை செங்கல்பட்டு – 603001 செங்கல்பட்டு மாவட்டம் |
இந்த வேலைக்கான பணி இடங்கள்?
மொத்தம் 178 பணியிடங்களை இதன்னுள் அடக்கியுள்ளது, இதில் விற்பனையாளருக்கு 157 பணியிடங்களுக்கு, கட்டுனருக்கு 21 பணியிடங்களும் உள்ளது, மொத்தமாக 278 பணியிடங்களை நம்மால் இதில் பார்க்க முடிகிறது.
இதில் வகுப்பு வாரியாக பணியிடங்களும் பிரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது:
- (GT) பொதுப்பிரிவினருக்கு: விற்பனையாளர் 48, கட்டுநர் 21
- (BC) பிற்படுத்தப்பட்டோர்: விற்பனையாளர் 41, கட்டுநர் 6
- பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர்: விற்பனையாளர் 5, கட்டுநர் 1
- (MBC/DNC) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர்: விற்பனையாளர் 32, கட்டுநர் 4
- (SC) ஆதி திராவிடர்: விற்பனையாளர் 24, கட்டுநர் 3
- SC(A) ஆதிதிராவிடர் அருந்ததியர்: விற்பனையாளர் 5, கட்டுநர் 1
- (ST) பழங்குடியினர்: கட்டுநர் பணியிடங்கள் கிடையாது, விற்பனையாளர் பணியிடங்களில் 1
இவைகளின் பாட்டிடலை நம்மால் அறிவிப்பில் பார்க்க முடிகிறது, அது கிழே உள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அப்போது உங்களுடைய விண்ணப்பதாரரின் புகைப்படம், கையெழுத்திட்ட சான்றிதழ், சாதி சான்றிதழ், நிரப்பப்பட்ட கல்வித்தகுதி, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆன்லைனில் விண்ணப்பத்திற்கான பணம் செலுத்திய ரசீது அல்லது நேரடியாக காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தியதற்கான ரசீது, மாற்றுத்திறனாளி என்றால் அதற்கான ஆதாரம், அரசு ஆதரவற்ற விதவை என்றால் அதற்கான ரசீது, முன்னாள் ராணுவத்தினர் எனில் அதற்கான ரசீது,
இது போன்ற பல விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டியிருக்கும், இதில் ஒவ்வொரு ஆதாரத்தையும் அப்லோட் செய்யும் போது அதற்கான கேபி 200 தாண்டாமல் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது, அதாவது 50kp முதல் 200kp வரை இருக்க வேண்டும் என்பது நினைவில் கொள்ளுங்கள்.
Chengalpattu District ration shop Recruitment 2022 pdf
[dflip id=”2817″ ][/dflip]
அரியலூர் | 75 | 10th | கிளிக் |
செங்கல்பட்டு | 178 | 10th,12th | கிளிக் |
சென்னை | 344 | 10th,12th | கிளிக் |
கோயம்பத்தூர் | 233 | 10th,12th | கிளிக் |
கடலூர் | 245 | 10th | கிளிக் |
தர்மபுரி | 98 | 10th | கிளிக் |
திண்டுக்கல் | 312 | 10th,12th | கிளிக் |
ஈரோடு | 243 | 10th,12th | கிளிக் |
காஞ்சிபுரம் | 274 | 10th,12th | கிளிக் |
கன்னியாகுமரி | 134 | 10th,12th | கிளிக் |
கரூர் | 90 | 10th,12th | கிளிக் |
கள்ளக்குறிச்சி | 116 | 10th | கிளிக் |
கிருஷ்ணகிரி | 146 | 10th | கிளிக் |
மதுரை | 163 | 10th,12th | கிளிக் |
மயிலாடுதுறை | 150 | 10th,12th | கிளிக் |
நாகப்பட்டினம் | 98 | 10th | கிளிக் |
நாமக்கல் | 200 | 10th,12th | கிளிக் |
நீலகிரி | 76 | 10th,12th | கிளிக் |
பெரம்பலூர் | 58 | 10th,12th | கிளிக் |
புதுக்கோட்டை | 135 | 10th | கிளிக் |
இராமநாதபுரம் | 114 | 10th | கிளிக் |
ராணிப்பேட்டை | 118 | 10th | கிளிக் |
சேலம் | 276 | 10th,12th | கிளிக் |
சிவகங்கை | 103 | 10th,12th | கிளிக் |
தென்காசி | 83 | 10th | கிளிக் |
தஞ்சாவூர் | 200 | 10th,12th | கிளிக் |
தேனி | 85 | 10th | கிளிக் |
திருப்பத்தூர் | 75 | 10th | கிளிக் |
திருவாரூர் | 182 | 10th,12th | கிளிக் |
தூத்துக்குடி | 141 | 10th,12th | கிளிக் |
திருநெல்வேலி | 98 | 10th | கிளிக் |
திருப்பூர் | 240 | 10th,12th | கிளிக் |
திருவள்ளூர் | 237 | 10th,12th | கிளிக் |
திருவண்ணாமலை | 376 | 10th,12th | கிளிக் |
திருச்சி | 231 | 10th,12th | கிளிக் |
வேலூர் | 168 | 10th,12th | கிளிக் |
விழுப்புரம் | 244 | 10th | கிளிக் |
விருதுநகர் | 164 | 10th,12th | கிளிக் |
கவனிக்க:
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிறந்த அரசாங்க வேலை வழங்குவதற்காக இந்த கட்டுரையை நாங்கள் தெளிவாக எழுதி உள்ளோம்.
இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள முழு விளக்கங்களையும் உங்கள் சுற்றத்தாருக்கு பகிர்வதன் மூலம் அவர்களுக்கும் இந்த வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.
எனவே இந்த வேலைவாய்ப்பு பற்றிய விளக்கங்களை உங்க சுற்றத்தாருக்கு பகிருங்கள், அனைவருக்கும் உதவி கரம் நீட்டுங்கள், நமது தமிழ் உறவுகளுக்கு அரசாங்க வேலை கிடைப்பதற்காக பாடுபடுவோம்.
நாங்களும் தொடர்ந்து கட்டுரைகளை வெளியிட முயற்சிக்கிறோம், ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்து பெட்டியில் தெரிவியுங்கள், அதற்கான பதிலையும் நாங்கள் கொடுப்போம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?