சென்னை அண்ணா பல்கலைக்கழக வேலை! ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்!!

Follow Us
Sharing Is Caring:

Adv. No.:6138/RUSA2.0/PD3/P0O1/2023-1: அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறந்த Technical Assistant வேலை வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்புக்கு ஒரு மணி நேரத்திற்கு 300/- ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கான விண்ணப்பங்கள் பற்றிய முழு விவரம் தான் இந்த JobsTn வலைதள கட்டுரை.

ஆம், அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட அப்ளிகேஷன் மற்றும் கல்வித் தகுதி போன்ற விவரங்களை இந்த பதிவில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

கவனிக்க: இந்த சென்னை அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப உதவியாளர் வேலைவாய்ப்பு பற்றிய வெளியீடு 26/08/2023 வெளியிடப்பட்டது. இருந்தாலும் இதற்கு கால அவகாசம் அதிகப்படியாக உள்ளது, அதாவது 18/10/2023 வரை இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே அண்ணா பல்கலைக்கழக Technical Assistant PG பணி சம்பந்தப்பட்ட முழு விவரங்களும், அது சார்ந்த விண்ணப்ப படிவமும், விண்ணப்பிக்கும் முறையும் கட்டுரையில் உங்களுக்கு கீழே கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் கட்டுரையில் தொடர்ந்து பயணித்து இந்த பல்கலைக்கழக வேலைக்கான விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க தயாராகுங்கள்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

அதேசமயம் உங்கள் சுற்றத்தாருக்கு இந்த வலைதள கட்டுரையை பகிர நினைத்தால் பகிருங்கள், அவருக்கு இந்த அண்ணா பல்கலைக்கழக வேலை கிடைக்க உதவி புரியலாம்.

முக்கியமான கருத்து: அண்ணா பல்கலை பல்கலைக்கழகம் மூலம் வெளியிட்டது தொழில்நுட்ப உதவியாளர் பி.ஜி-க்கான வேலை வாய்ப்பு என்பது ஆறு மாத காலத்திற்கு மட்டுமே கொடுக்கப்படும் வேலை என்பது குறிப்பிடத்தக்கது, இதற்க்கு ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் சம்பளம்.

மேலும் உங்களுடைய வேலை செயல்திறனின் அடிப்படையில் வருங்காலத்தில் நீட்டிக்க படலாம் அல்லது நிரந்தரமாக பணி கிடைக்கலாம், அது உங்கள் அண்ணா பல்கலைக்கழகம் எடுக்கும் முடிவை பொறுத்து அமையும். இருந்த போதும் வேலை திறனை பொறுத்து பணி நீட்டிக்கப்படலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Chennai Anna University Technical Assistant Jobs Details

அறிவிப்புannauniv.edu
பதவிTECHNICAL ASSISTANT PG-! (Under Skilled Manpower)
சம்பளம்Rs. 300 per hour (Restricted to a maximum of 100 tools for Real-time simulators and Hours/month)
காலியிடம்1
பணியிடம்அண்ணா பல்கலைக்கழகம் சென்னை-25
தகுதிகள்PG: M.E / M.Tech, UG: B.E/B.Tech.
விண்ணப்பிக்க கடைசி தேதி18/10/2023

அண்ணா பல்கலை பல்கலைக்கழ வேலையின் விதம் என்ன?

அண்ணா பல்கலைகழியின் பல்கலைக்கழகத்தின் வேலையை பொருத்தவரை தொழில்நுட்ப உதவியாளர் பிஜிக்கான ஆள் சேர்ப்பு என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் இதை டெக்னிக்கல் அசிஸ்டன்ட் என்று கூறுவார்கள்.

இந்த (RECRUITMENT OF TECHNICAL ASSISTANT PG-! (Under Skilled Manpower) பணிக்கான விண்ணப்பம் தான் தற்போது தபால் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் உரிய தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையால் இந்த வேலையை பற்றிய முழு விவரம்தான் இந்த வலைதள கட்டுரை.

அண்ணா யுனிவர்சிட்டி வேலைக்கான கல்வித் தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை நீங்கள் யூ.ஜி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் B.E/B.Tech. படித்திருக்க வேண்டும், மேலும் கருவிகளை பயன்படுத்தும் திறன், வன்பொருளில் வேலை செய்யும் திறன் போன்றவை தேவைப்படுகின்றது, அவை பற்றிய விளக்கங்கள் தெளிவாக கீழே உங்களுக்கு ஆங்கிலத்தில் கலந்து கிடைக்கும்.

  • அவசியம்: UG: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முதல் வகுப்பு B.E/B.Tech.
  • PG: M.E / M.Tech — Power System Engineering / Power Electronics and Drives.
  • Desirable: Capable of using MATLAB tools for real-time simulators and working knowledge in Hardware in loop Simulation.

தொழில்நுட்ப உதவியாளர் பி.ஜி-க்கான ஊதியம் எவ்வளவு?

வேலைக்கான ஊதியத்தைப் பொறுத்தவரை ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும் அதிகபட்சம் 100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது Rs. 300 per hour (Restricted to a maximum of 100 tools for Real-time simulators and Hours/month).

பொதுவான சில நிபந்தனைகள் மற்றும் செய்திகள்:

குறுகிய பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், அதாவது தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கியமாக இந்த பதவியானது ஆறு மாத காலத்திற்கு மட்டுமே தற்காலிகமாக வழங்கப்படுகிறது, செயல்திறன் அடிப்படையில் உங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படலாம். அதாவது உங்கள் வேலை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு திருப்தி அளித்திருந்தால் மேலும் இந்த வேலையை நீட்டிக்க படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே சிறப்பாக செயலாற்றுங்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனி விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தகுதி மற்றும் அனுபவம் தொடர்பான எந்த ஒரு விஷயத்திற்கும் தேவையான சான்றிதழ்களை இணைக்க வேண்டும், ஆகையால் உங்களுக்கு கூடுதல் அனுபவமோ தகுதியோ இருந்தால் அதையும் நீங்கள் விண்ணப்ப படிவத்துடன் இணைத்து அனுப்பவும், அப்போது உங்களுக்கு கட்டாயம் இந்த வேலைக்கான நேர்காணல் அழைப்பு வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும், நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்களுக்கு TA/DA அனுமதிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணா யுனிவர்சிட்டி வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கான அனைத்து ஆவணங்களையும் முதலில் நீங்கள் ஒன்று திரட்ட வேண்டும். அதற்கான தகுதி மற்றும் விருப்பம் கொண்ட ஆர்வமுள்ளவராக நீங்கள் இருக்க வேண்டும், பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் அண்ணா பல்கலைக்கழக அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்ட முகவரி அல்லது மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட வேண்டும், அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Dr.V கோமதி, குழு ஒருங்கிணைப்பாளர் – P01 RUSA2.0 மின் மற்றும் மின்னணு பொறியியல் திட்டத் துறை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை -25. என்ற முகவரிக்கு அனுப்பலாம், அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப விருப்பப்படுவோர் இந்த இரண்டு (gomesceg@gmail.com, p01rusa.2@gmail.com) மின்னஞ்சலில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

Address In English: Dr.V Gomathi, Team Coordinator – P01 RUSA2.0 Project Department of Electrical and Electronics Engineering, Anna University, Chennai -25.

ANNAUNIVERSITY CHENNAI RECRUITMENT OF TECHNICAL ASSISTANT PG
ANNAUNIVERSITY CHENNAI RECRUITMENT OF TECHNICAL ASSISTANT PG

கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி, பிறந்த தேதி, மதிப்பெண் தாள்கள், அனுபவ சான்றிதழ்கள் மற்றும் பிற கல்வி சான்றிதழ்களின் தொடர்பான சுய சான்றோப்பமிட்ட நகலுடன் 18/10/2023 அன்று, அல்லது அதற்கு முன் அனுப்புமாறு அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு விண்ணப்பத்தை அனுப்பும் போது அட்டையின் மேலே (RUSA2.0 / AU” “Post cade PO1-1”) என்ற வேலையின் கூறியீட்டை நீங்கள் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களோடு சில வார்த்தை:

நீங்கள் அந்த தொழில்நுட்ப உதவியாளர் பி.ஜி-க்கான வேலைக்கு விருப்பமாக இருந்தால் கட்டாயம் இந்த வேலைக்கு விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான விஷயங்களில் ஈடுபடுங்கள், அதற்கான தகுதியும் திறமையும் உங்களிடம் இருந்தால் போதுமானது. அல்லது உங்கள் சுற்றத்தாருக்கு இந்த வேலையை தயவு செய்து பகிருங்கள், காரணம் மற்றவர்களுக்கு இது உதவியாக இருக்க கூடும் என்று கருதுகிறோம். உங்களுடைய கருத்தை கீழே பதிவிடுங்கள், நாங்கள் அடுத்து சிறந்த வேலையவாய்ப்பில் உங்களை சந்திக்கிறோம்.

Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

1 thought on “சென்னை அண்ணா பல்கலைக்கழக வேலை! ஒரு மணி நேரத்திற்கு 300 ரூபாய் சம்பளம், உடனே விண்ணப்பியுங்கள்!!”

Leave a Comment