சென்னை மாவட்ட அரசு பணி: இந்த வேலைவாய்ப்பின் முழு தகவலையும் நமது வலைதளத்தில் காண்போம்! தற்போது சென்னை மாவட்டத்தில் 2 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005ன் கீழ் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரிய இந்த அரசாணை வெளியிடப்பட்டள்ளது. அதனை பற்றி கீழே பார்ப்போம்.
சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் பணிபுரிய இளநிலை உதவியாளர் (Junior Assistant) மற்றும் தட்டச்சர் (Junior Cum Typist) பணிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைக்கான கல்வித் தகுதியினை பொறுத்தவரை பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராகவும், தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவராகவும், கணினி பயன்பாட்டினை அறிந்தவராகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC/DC) வகுப்பைச் சார்ந்த 32 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
குறிப்பாக வேலைவாய்பு அலுவலகத்தில் பதிவு செய்தவராக இருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இந்த வேலைக்கான ஊதியத்தினை பொறுத்தவரை தொகுப்பூதிய அடிப்படையில் மாத சம்பளம் Rs.12,000/- என்று நிர்ணயிக்கப்பட்டூள்ளது.
(குறிப்பு: தொகுப்பூதியம் என்பது அகவிலைப்படி போன்ற எந்தவித சலுகையும் வழங்காமல், அடிப்படை ஊதியம் மட்டுமே வழங்கப்படுவது ஆகும்) இது முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையிலான வேலைவாய்ப்பு.
மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அதற்குரிய சான்றிதழ் நகல்களுடன் சென்னை மாவட்ட சமூகநல அலுவலகத்தினை அணுகி, 10.11.2023 அன்று பிற்பகல் அலுவலை நேரத்திற்கு முன்பு விண்ணப்பிக்குமானு சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடே இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வண்டிய முகவரியினை எங்கள் வலைதளத்தில் உங்களுக்காக வழங்கியுள்ளோம்.
இது தொகுப்பூதிய அடிப்படையிலான வலை என்பதற்காக அலட்சியமாக இருத்தல் வேண்டாம். தங்களின் திறமைகளை பார்த்தும், வேலை செய்யும் விதத்தினை பார்த்தும் வேலை நிரந்தரம் செய்யப்படும் வாய்ப்பும் ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம், சென்னை.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 8வது தளம்,
சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை,
சென்னை 600001.
[dflip id=”10629″ ][/dflip]
அறிவிப்பு | சென்னை மாவட்ட சமூகநல அலுவலகம் |
பதவி | Junior Assistant மற்றும் Junior Cum Typist |
சம்பளம் | Rs.12,000/- |
காலியிடம் | 02 |
பணியிடம் | மாவட்ட சமூகநல அலுவலகம் |
தகுதிகள் | பத்தாம் வகுப்பில் தேர்ச்சி |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10/11/2023 |
சென்னையின் அதிகாரப்பூர் அரசு வலைத்தளம் என்ன?
https://chennai.nic.in/notice_category/announcements/
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.