கோவை மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணிக்கான நேர்காணல் முறையில் ரூ.43,000/- சம்பளத்துடன் ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது.
ஆம் தமிழக அரசு பால் உற்பத்தி துறைக்கென தனி துறையான் ஆவின் உள்ளது. இத்துறையின் கீழ் ஆவின் நிறுவனம் செயல்படுகிறது.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணிக்கு சேர விருப்பாமுள்ளவர்களுக்காக விவரங்கள் கீழே:
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் (veterinary consulant) பணியிடம் நிரப்பப்படும்.
இதற்க்கு கல்வித்தகுதி கால்நடை அறிவியல் & கால்நடை பராமரிப்பு (B.V.Sc. & A.H) இளங்கலை மற்றும் இந்த வேலைக்கான கணினி திறன்கள். மேலும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
மாத ஊதிம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்படும். மேலும் பயணச் செலவுக்கு ரூ.8,000/- ஊக்கத் தொகையாக ரூ.5,000/- வழங்கப்படும். இதன் மூலம் மாதம் ரூ.43,000/- வரை சம்பளம் கிடைக்கும்.
வயது: விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். முக்கியமாக இந்த வேலை திட்டத்திற்கு எழுத்துத் தேர்வு கிடையாது, மாறாக நேர்காணல்கள் மட்டுமே. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேரடி நேர்காணலில் பங்கேற்கலாம்.
நேர்காணல் இடம்: இந்தப் பணிக்கான நேர்காணல் நவம்பர் 28-ஆம் தேதி காலை 10 மணிக்கு புதிய பால் பண்ணை வளாகம், பச்சாப்பாளையம், காளம்பாளையம் (கடல்), பேரூர் (வழி), கோவை 641 0101 என்ற முகவரியில் நடைபெறும்.
அறிவிப்பு | avinuty.ac.in |
பதவி | veterinary consulant |
சம்பளம் | 43,000/- |
காலியிடம் | 1 |
பணியிடம் | கோவை ஆவின் நிறுவனத்தில் |
தகுதிகள் | Degree |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28/11/2023 |
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.