எழுதப்‌ படிக்கத்‌ தெரிந்திருந்தால்‌ போதும், அரசு இரவுக்‌ காவலர்‌ பணி!

Follow Us
Sharing Is Caring:

தருமபுரி மாவட்டத்தில்‌ காலியாக உள்ள அரசு இரவுக்‌ காவலர்‌ (Night Watchman) பணியிடத்தினை நிரப்புவதற்கான அரசு அறிவிப்பினை பற்றி தெளிவாக காண்போம்‌ வாருங்கள்‌!

இந்த அரசு Night Watchman வேலையைப்‌ பற்றிய முழு தகவலையும்‌ எங்கள்‌ வலைதளத்தில்‌ உங்களுக்காக கொடுத்துள்ளோம்‌, எனவே வாருங்கள் பயணிக்கலாம்.

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சி அலகில்‌ அரசு தரப்பில்‌ காலியாக உள்ள 1 இரவுக்‌ காவலர்‌ பணியிடத்தை பூர்த்தி செய்யும்‌ பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்‌ 13,11.2023 முதல்‌ 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.45 மணி வரை அலுவலகத்தில்‌ சமர்ப்பிக்கப்பட வேண்டும்‌.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

அதோடு இந்த Night Watchman வேலைக்கான சம்பளம்‌ ரூ.15,700/- முதல்‌ ரூ.50,000/- (Level-1) வரை என்ற சம்பள ஏற்ற முறையில்‌ அரசு நிர்ணயம்‌ செய்யும்‌ படிகளுடன்‌ வழங்கப்படும்‌.

முக்கியமாக வயது வரம்பினை பொறுத்தவரை 01.07.2023 அன்று குறைந்தபட்சம்‌ 18 வயது பூர்த்தி அடைந்தவராக நீங்கள் இருக்க வேண்டும்‌. அறிவிப்பின்படி அதிகபட்ச வயது பூர்த்தி அடையாமல்‌ இருத்தல்‌ வேண்டும்‌.

வகுப்புவாரியான வயது விளக்கம்:

(01.07.2023 அன்றுள்ளவாறு) மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ சீரமரபினர்‌ 34 வயதிற்குள்‌ இருத்தல்‌ வேண்டும்‌ என்று கூறப்பட்டுள்ளது. மேலும்‌ இதற்கான இனசுழற்சி மற்றும்‌ இடஒதுக்கீட்டிற்கான விவரங்கள்‌ குறித்தும்‌ உங்களுக்கான எங்கள்‌ JobsTn வலைதளத்தில்‌ கொடுத்துள்ளோம்‌.

கவனிக்க: இவ்வேலைக்கு மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ சீரமரபிணர்‌ (MBC – DC – General) மட்டுமே விண்ணப்பபிக்க தகுதியுடையவர்கள்‌ ஆவார்கள்‌.

தருமபுரி மாவட்டத்தில்‌ வெளியான இந்த அரசு இரவுக்‌ காவலர்‌ பணியிடத்திற்கான கல்வித்‌ தகுதியினை பொறுத்தவரையில்‌ எழுதப்‌ படிக்கத்‌ தெரிந்திருந்தால்‌ போதுமானது.

மேலும்‌ இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப்‌ படிவத்தினை https: //dharmapuri.tn.nic.in என்ற இணையதள முகவரியிலும்‌ மற்றும்‌ எங்கள்‌ வலைதளத்திலும்‌ பதிவிறக்கம்‌ செய்து விண்ணப்பிக்கலாம்‌.

தருமபுரி மாவட்ட அரசு இரவுக்‌ காவலர்‌ வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான சில நிபந்தனைகள்‌ கொடுக்கப்பட்டுள்ளது, அவற்றையும்‌ உங்களுக்கான எங்கள்‌ வலைதளத்தில்‌ பகிர்ந்துள்ளோம்‌:

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்கள்‌ தங்களது விண்ணப்பத்தினை www.dharmapuri.tn.nicin என்ற இணைதளத்திலும்‌ தேசிய தொழில்நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும்‌ (National Career Service Portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம்‌ செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்‌.

இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 13.11.2023 அன்று முதல்‌ 21.11.2023 வரை அலுவலக வேலை நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 05.45 மணி வரை மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ (வளர்ச்சிப்‌ பிரிவு), இரண்டாவது தளம்‌, தருமபுரி – 636 705 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால்‌ மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்‌.

இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்யப்பட்ட விண்ணப்பப்‌ படிவத்தில்‌ உள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்‌. மேலும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனசுழற்சி) விண்ணப்பங்கள்‌ கண்டிப்பாக நிராகரிக்கப்படும்‌.

கவனிக்க: தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத்‌ தேர்வு நடைபெறும்‌. இடம்‌ மற்றும்‌ தேதி குறித்து நேர்காணல்‌ கடிதம்‌ (Call Letter) பின்னர்‌ அனுப்பி வைக்கப்படும்‌. மேலும் தகுதி இல்லாத விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. அதோடு காலதாமதமாக வரும்‌ விண்ணப்பங்கள்‌ எக்காரணம்‌ கொண்டும்‌ பரிசீலிக்கப்பட
மாட்டாது.

பொறுப்பு: எந்த ஒரு விண்ணப்பத்தையும்‌ நிராகரிக்கும்‌ அதிகாரம்‌ நிர்வாகத்திற்கு உண்டு போன்ற நிபந்தனைகள்‌ அந்த அரசு ஆணையில்‌ கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின்‌ நேர்முக உதவியாளர்‌ (வளர்ச்சி),
மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌ (வளர்ச்சிப்‌ பிரிவு),
இரண்டாவது தளம்‌, தருமபுரி – 636 705.


Government Night Watchman Job - Apply Now in Dharmapuri District!
Tamilnadu Government Night Watchman Jobs

Dharmapuri Rural Development and Panchayat Unit Night Watchman Notification

Application form for Dharmapuri Rural Development and Panchayat Unit Night Watchman

அறிவிப்புஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்துறை
பதவிஅரசு இரவுக்‌ காவலர்‌ (Night Watchman)
சம்பளம்15,700/- முதல்‌ 50,000/-
காலியிடம்01
பணியிடம்தருமபுரி மாவட்டத்தில்‌
தகுதிகள்எழுதப்‌ படிக்கத்‌ தெரிந்திருந்தால்‌ போதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி21/11/2023

நவம்பர் மாத தருமபுரி மாவட்ட அரசு வேலைகள்!

அரசு வேலைகள்கடைசி தேதி
மாவட்ட அரசு சுகாதார சங்கத்தில்‌ DHS வேலை!23/11/2023
தருமபுரி அரசு அலுவலக உதவியாளர்‌ பணி!21/11/2023
தருமபுரி மாவட்டத்தில்‌ அரசு ஓட்டுநர்‌ பணியிடம்‌!21/11/2023
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment