2 லட்சம் ரூபாய் ஊதியத்தில் ஒரு சிறந்த வேலைவாய்ப்பை, அதுவும் அரசாங்க வேலைவாய்ப்பை உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம்.
இது கேஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட், அதாவது சுருக்கமாக (GAIL) என்று அழைக்கப்படக்கூடிய நிறுவனத்தில் 200,000 ரூபாய் வரை அதிகபட்ச சம்பளமாக வழங்கக்கூடிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 77 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அந்த (Number: L40200DL1984GOI018976) அறிவிப்பில் GAIL (INDIA) LIMITED நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை உங்களுக்கு இந்த வலைதள கட்டுரை மூலம் வழங்க உள்ளோம், மேலும் நமது தாய்மொழியில் சுலபமாக இந்த தகவலை தெரிந்து கொள்ள உதவும் நாங்கள் முற்படுகிறோம்.
GAIL (INDIA) LIMITED வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்து எடுக்கப்பட்ட இந்த தகவல் அனைத்தையுமே நீங்கள் இங்கு காணலாம்.
இந்த தகவலில் இந்த வேலைக்கான கல்வி தகுதி என்ன, வேலைக்கான ஊதியம் எவ்வளவு, எவ்வாறு இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது, யாரெல்லாம் இதற்குத் தகுதியானவர் என்று பல தகவல்களை நீங்கள் காண முடியும்.
அதோடு இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அதிகாரப்பூர்வ வலைதளம், அதிகாரபூர்வமாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் பகுதி போன்ற பல விஷயங்களை ஒன்றுதிரட்டி தெளிவாக கொடுத்துள்ளோம்.
மேலும் அதிகாரப்பூர்வ படிவத்தை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும் உங்களுக்கு இங்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், வாருங்கள் தொடர்ந்து வலைதளத்தில் இது சம்பந்தமான தகவல்களை காணலாம், முதலில் இந்த வேலைக்கான கல்வி தகுதியை பார்க்கலாம்.
வேலைக்கான கல்வி தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை பட்டப்படிப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
(CA, B.com, M.Com, M.Sc, Degree in Hindi, Degree In Engineering) இந்த படிப்பை முடித்தவர்கள் அனைவருமே இந்த பணிக்கு தகுதியானவர்கள்.
நிச்சயம் இதை முயற்சி செய்யுங்கள், ஒருவேளை உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கருதினால் ஒரு நபரிடமாவது இந்த வலைதள கட்டுரையை கொண்டு செல்லுங்கள்.
அதன் மூலம் தமிழக மக்களுக்கு இந்த வேலை கிடைக்க உதவியாக இருக்கும், அடுத்த கட்டமாக தகவலை நோக்கி பயணிக்கலாம்.
GAIL வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை நாம் ஐந்து விதமாகப் பார்க்க முடிகிறது, அதில் குறைந்தபட்ச ஊதியமாக 29,000/- அதிக பட்ச ஊதியமாக 2,00,000/- வரை நீடிக்கிறது.
இதில் ஏன் இந்த மாறுபாடு என்ற கேள்வி உங்களுக்கு வந்தால் இது மொத்தம் ஐந்து விதமான பகுதிகளை உள்ளடக்கியது, அதில் E-3, E-2, E-1, S-7, S-5 என்று அழைக்கக்கூடிய ஐந்து விதமான தகுதியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது, அது சம்பந்தமான தகவலை கீழே தெளிவாக காணலாம்.
E-3 Rs.70,000 – 2,00,000/- Rs.70,000/-
E-2 Rs.60,000 – 1,80,000/- Rs.60,000/-
E-1 Rs.50,000 – 1,60,000/- Rs.50,000/-
S-7 Rs.35,000-1,38,000/- Rs.35,000/-
S-5 Rs.29,000-1,20,000/- Rs. 29,000/-
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Gas Authority Of India Limited |
துறை | GAIL (இந்தியா) லிமிடெட் |
திறக்கும் தேதி | 16/09/2022 |
கடைசி தேதி | 15/10/2022 |
வேலை இடம் | இந்தியா முழுவதும் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
தொடர்பு கொள்ளவும் | 011-2617 2580, career@gail.co.in |
வேலை இடம் எங்கு?
இந்த வேலையானது இந்தியா முழுக்க வழங்கப்படும், அதேசமயம் இது ஒரு சிறந்த மத்திய அரசாங்கத்தின் வேலை என்பதால் நிச்சயம் இதற்கு நீங்கள் விண்ணப்பித்து வேலையை பெற முயற்சியுங்கள், அதற்கான தகுதி மட்டும் உங்களிடம் இருந்தால் போதுமானது.
வருங்காலத்தில் உங்கள் சொந்த ஊருக்கே இந்த வேலையை மாற்றி வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது, ஒருவேளை நீங்கள் பணிபுரியும் மாநிலம் வேறாக இருந்தாலும் அதற்கான தகுந்த ஊதியம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, எனவே கட்டுரையில் தொடர்ந்து இது சம்பந்தமான தகவலை சேகரிக்க போகலாம் வாருங்கள்.
வேலையின் பெயர் என்ன?
பொதுவாக இந்த வேலை 77 காலிப்பணியிடங்களை உள்ளடக்கியது, வேலையின் பெயரை பார்த்தாலே தெரியும் அனைத்துமே மரியாதை மிக்க பதவி என்று.
அதாவது (Manager, Officer, Senior Officer, Foreman, Super Intendant, Senior Accountant) போன்ற வேலைகளுக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த GAIL (INDIA) LIMITED அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பை அடையும் வாய்ப்பையும், அதை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பையும் நீங்கள் நமது வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்ப கட்டணம்?
பொதுவாக விண்ணப்பக் கட்டணத்தை பார்க்கும்போது சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இருக்காது, சில பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இருக்கும், அதே போல் தான் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க 250 குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் சில பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் உண்டு, சிலருக்கு இல்லை, அதை பற்றிய தகவலை பாருங்கள் (OBS (NLC) Rs 250/- SC/ST/PWBD – NO), அடுத்த கட்டமாக தகவலை வாருங்கள் பார்க்கலாம்.
வயது வரம்பு என்ன?
வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை சற்று அதிகமான வயது வரம்பு இந்த வேலையில் நம்மால் காணமுடிகிறது.
அதாவது குறைந்த பட்சம் 33 ஆகவும், அதிகபட்சம் 50 வயது உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது சம்பந்தமான வகுப்பு வாரியான தகவல் அனைத்தையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக நீங்கள் பாருங்கள், அதில் 28 பக்க அறிவிப்பில் அனைத்து தகவலும் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் ஒரு கணக்கை திறந்து உங்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அறிவிப்பு
முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், அதிகாரபூர்வமாக தளத்தையும் அணுக வேண்டும் அதற்கான வாய்ப்பை எங்கள் வலைதள கட்டுரையில் பெறுவீர்கள்.
பதிவிறக்கம்
பின்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதிலுள்ள தகவல்களை சரியான முறையில் படித்து பாருங்கள்.
கல்வித் தகுதி
பின்பு உங்கள் தகுதிக்கு இந்த வேலையை விண்ணப்பிக்க முடியுமா? அதற்கு உங்கள் கல்வித் தகுதி உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு உங்கள் ஆவணங்களை அனைத்தையும் சரியாக நிரப்புங்கள், அதில் உங்களுடைய கூடுதல் சான்று ஏதேனும் இருந்தாலும் நிரப்ப மறக்காதீர்கள்.
தகவல் தெளிவாக
மேலும், உங்களுடைய ஈமெயில் ஐடி, மொபைல் நம்பர் போன்ற தகவல் தெளிவாக உள்ளவாறு கொடுங்கள், அனைத்தையும் பதிவேற்றம் செய்யுங்கள்.
பதிவேற்றம்
வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும்போது விண்ணப்பக் கட்டணம் கேட்க நேரிட்டால் நிச்சயம் அதை நீங்கள் செலுத்துங்கள், அனைத்து தகவலும் சரியான முறையில் செய்யப்பட்டதை உறுதி செய்த பின்னரே இறுதி பொத்தானை அழுத்துங்கள்.
நகல் எடுக்க
தற்போது உங்கள் விண்ணப்பம் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும், இந்த வேலைக்காக நீங்கள் வெற்றிகரமாக விண்ணப்பித்து இருப்பீர்கள், மேலும் நீங்கள் விண்ணப்பித்த இதற்கான பகுதி தோன்றினால் அதை கட்டாயம் நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு, எழுத்துத் தேர்வுக்கும் உங்களை அழைப்பார்கள்.
Official Announcement
கவனியுங்கள்:
நாங்கள் இது போன்ற பல வேலைவாய்ப்புகளை அவ்வப்போது வழங்கி வருகிறோம், தமிழ் மக்களுக்கான வேலையை தமிழ் மொழியில் தேர்ந்தெடுத்து வழங்குவதில் நாங்கள் எப்போதும் தயங்குவதில்லை.
நீங்களும் இந்த தகவலை தமிழ் மக்களுக்காக வழங்க நினைத்தால் நிச்சயம் உங்கள் ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது பகிருங்கள், அதோடு இந்த வேலைக்கு நீங்களும் தகுதியானவர் என்றால் நிச்சயம் பதிவு செய்யுங்கள் உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.